முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மதுபான கொள்கை ஊழல் வழக்கு: கவிதாவின் நீதிமன்ற காவல் நீட்டிப்பு

வெள்ளிக்கிழமை, 5 ஜூலை 2024      இந்தியா
Kavita 2023-10-22

Source: provided

புதுடெல்லி : மதுபான கொள்கை ஊழல் வழக்கில் கவிதாவின் நீதிமன்ற காவலை ஜூலை 18-ம் தேதி வரை நீட்டித்து சிறப்பு நீதிபதி உத்தரவிட்டார்.

மதுபான லைசென்ஸ் பெற 100 கோடி ரூபாய் அளவில் ஆம் ஆத்மி கட்சிக்கு லஞ்சம் கொடுத்ததாக சவுத் குரூப்பின் முக்கிய குற்றவாளியாக சந்திரசேகர ராவின் மகள் கே.கவிதா மீது அமலாக்கத்துறை குற்றம்சாட்டியது. இந்த வழக்கு தொடர்பாக கடந்த மார்ச் மாதம் 15-ந்தேதி கவிதா கைது செய்யப்பட்டார். தற்போது நீதிமன்ற காவலில் திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இந்த வழக்கில் கவிதாவிற்கு எதிரான குற்றப்பத்திரிகை மே 29ம் தேதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட பின்னர் கோர்ட்டு பிடிவாரண்டுகளை பிறப்பித்தது. மேலும் குற்றவாளிகளான இளவரசன், தாமோதர் மற்றும் அரவிந்த் சிங் ஆகிய 3 பேருக்கும் கோர்ட்டு ஜாமீன் வழங்கியது. அமலாக்கத்துறை விசாரணையின்போது குற்றம் சாட்டப்பட்ட மூவர் கைது செய்யப்படாமல் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டதால் இவர்களுக்கு ஜாமீன் வழங்கப்பட்டது.

இதனிடையே, இந்த வழக்கு விசாரணை தொடர்பாக கவிதாவின் நீதிமன்ற காவல் நேற்றுடன் நிறைவடைந்த நிலையில், நேற்று ரோஸ் அவன்யூ கோர்ட்டில் நேரில் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது, சிறப்பு நீதிபதி காவேரி பவேஜா அவரது காவலை ஜூலை 18ம் தேதி வரை நீட்டித்து உத்தரவிட்டார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 4 months 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 6 months 1 week ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 6 months 1 week ago
View all comments

வாசகர் கருத்து