முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆகஸ்ட்டில் மத்திய அரசு கவிழலாம்: லல்லு பிரசாத்

வெள்ளிக்கிழமை, 5 ஜூலை 2024      இந்தியா
Laluprasad-Yadav 2023 07 31

Source: provided

பாட்னா : ஆகஸ்ட்டில் மோடி அரசு கவிழலாம் என பீகார் முன்னாள் முதல்வரும், ராஷ்ட்ரிய ஜனதா தள தலைவருமான லல்லு பிரசாத் யாதவ் தெரிவித்துள்ளார்.

கட்சியின் துவக்க நாளையொட்டி அவர் கூறியதாவது, மோடி அரசு பலவீனமாக உள்ளது. எப்போது வேண்டுமானாலும் ஆட்சி கவிழலாம். ஆகஸ்டில் கவிழலாம். கட்சித் தொண்டர்கள் எதற்கும் தயாராக இருக்க வேண்டும். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார். பீகாரில் இருந்து புதிதாகப் பதவியேற்றுள்ள மத்திய அமைச்சர்களுக்கு அண்மையில் நடைபெற்ற பாராட்டு விழாவில், தேசிய ஜனநாயகக் கூட்டணியின் பெரும்பாலான தலைவர்கள் கலந்துகொண்ட நேரத்தில் அவர் இந்தக் கருத்தைத் தெரிவித்துள்ளார்.

பீகாரில் ஆளும் ஐக்கிய ஜனதா தளம், மத்தியிலும் மாநிலத்திலும் பாஜகவுடன் கூட்டணி வைத்துள்ளது. மக்களவையில் ஐக்கிய ஜனதா தளம் கட்சிக்கு 12 எம்.பி.க்கள் உள்ளனா். ஆந்திர முதல்வா் சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சிக்கு (16 எம்.பி.க்கள்) அடுத்தபடியாக பாஜக கூட்டணியில் இரண்டாவது பெரிய கட்சியாக ஐக்கிய ஜனதா தளம் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 4 months 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 6 months 1 week ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 6 months 1 week ago
View all comments

வாசகர் கருத்து