முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உலகக்கோப்பையை வென்ற இந்திய அணிக்கு ரூ.11 கோடி : மகாராஷ்டிரா அரசு அறிவிப்பு

வெள்ளிக்கிழமை, 5 ஜூலை 2024      விளையாட்டு
Maha 2024-07-03

Source: provided

மும்பை : உலகக்கோப்பையை வென்ற இந்திய அணிக்கு ரூ.11 கோடி பரிசு தொகையை மகாராஷ்டிரா அரசு அறிவித்துள்ளது.

ரூ.125 கோடி பரிசு...

சமீபத்தில் நடைபெற்ற டி20 உலகக் கோப்பை தொடரின் இறுதிப்போட்டியில் இந்தியா-தென்ஆப்பிரிக்கா அணிகள் மோதின. இதில் இந்தியா 7 ரன் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வென்றது. 17 ஆண்டுகளுக்கு பிறகு இந்திய அணி 2-வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது. இதற்கிடையே, டி20 உலகக் கோப்பை வென்றதற்காக இந்திய அணிக்கு ரூ.125 கோடி பரிசுத் தொகையை அறிவித்தார் பிசிசிஐ செயலாளர் ஜெய்ஷா.

நகரமே ஸ்தம்பித்தது...

உலகக்கோப்பை வெற்றிக் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக நேற்று முன்தினம் இந்திய அணி வீரர்கள் மும்பையில் திறந்த பஸ்சில் ஊர்வலமாக அழைத்துச் செல்லப்பட்டனர். கிரிக்கெட் வீரர்களைக் காண ரசிகர்கள் படையெடுத்ததால் மும்பை நகரமே ஸ்தம்பித்தது. இந்திய வீரர்கள் திறந்த பஸ்சில் உலகக் கோப்பையுடன் பேரணியாக சென்றனர். அதன்பின் வான்கடே மைதானத்தில் நடந்த பாராட்டு விழாவில் 125 கோடி ரூபாய் பரிசுத்தொகை வழங்கப்பட்டது.

பாராட்டு விழா.... 

இந்நிலையில், உலகக்கோப்பை வென்ற இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா உள்ளிட்ட மும்பை வீரர்களுக்கு மகாராஷ்டிரா சட்டசபையில் நேற்று பாராட்டு விழா நடந்தது. அப்போது பேசிய முதல்வர் ஏக்நாத் ஷிண்டே உலகக்கோப்பை வென்ற இந்திய அணிக்கு 11 கோடி ரூபாய் பரிசு வழங்கப்படும் என அறிவித்தார்.

முன்னதாக டி20 உலகக்கோப்பையை வென்ற இந்திய அணியில் இடம் பிடித்த மும்பை வீர்ரகளான ரோகித் சர்மா, சூர்யகுமார் யாதவ், யஷஸ்வி ஜெய்ஸ்வால், ஷிவம் துபே ஆகியோரை மராட்டிய முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே நேரில் அழைத்து பாராட்டினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 4 months 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 6 months 1 week ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 6 months 1 week ago
View all comments

வாசகர் கருத்து