முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

2024 டி20 உலகக்கோப்பையை ஒரு கேப்டனாக வென்றது மிக சிறப்பானது: ரோகித்

வெள்ளிக்கிழமை, 5 ஜூலை 2024      விளையாட்டு
Rogit-Sarma 2024-07-03

Source: provided

மும்பை : 2024 டி20 உலகக்கோப்பையை கேப்டனாக வென்றது மிகவும் சிறப்பானது என்று இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா பெருமிதம் தெரிவித்துள்ளார்.

பிரதமர் மோடியுடன்...

டி20 உலகக்கோப்பையை வென்ற இந்திய அணி நேற்று முன்தினம் தாயகம் திரும்பியது. அவர்களுக்கு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இதையடுத்து, இந்திய அணி வீரர்கள் பிரதமர் மோடியை சந்தித்து வாழ்த்து பெற்றனர். உலகக் கோப்பையுடன் நாடு திரும்பிய இந்திய அணிக்கு நேற்று வான்கடே மைதானத்தில் பாராட்டு விழா நடந்தது. முன்னதாக அலைகடலென குவிந்திருந்த ரசிகர்கள் மத்தியில் இந்திய அணி வீரர்கள் பயணித்த பேருந்து ஊர்ந்து வந்தது.

சால்வை அணிவித்து... 

இதற்கிடையே, இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா மற்றும் கிரிக்கெட் வீரர்கள் சூர்யகுமார் யாதவ், ஷிவம் துபே, யஷஸ்வி ஜெய்ஸ்வால் ஆகியோர் மும்பையில் மகாராஷ்டிர முதல் மந்திரி ஏக்நாத் ஷிண்டேவை அவரது இல்லத்தில் சந்தித்தனர். அங்கு முதல் மந்திரி ஏக்நாத் ஷிண்டே அவர்களுக்கு சால்வை அணிவித்து பரிசு வழங்கினார். இந்நிலையில், மகாராஷ்டிரா மாநில சட்டசபையான விதான் பவனில் முதல் மந்திரி ஏக்நாத் ஷிண்டே தலைமையில் இந்திய கேப்டன் ரோகித் சர்மா உள்ளிட்ட மும்பை வீரர்களுக்கு பாராட்டு விழா நடைபெற்றது. இதில் ரோகித் சர்மா, சூர்யகுமார் யாதவ், ஷிவம் துபே மற்றும் யஷஸ்வி ஜெய்ஸ்வால் ஆகியோர் கலந்துகொண்டனர்.

கேப்டனாக வென்ற... 

இந்நிலையில் ஒரு வீரராக 2007 டி20 உலகக்கோப்பையை வென்றதை விட இந்தியாவின் கேப்டனாக வென்ற 2024 டி20 உலகக் கோப்பையே தமக்கு மிகவும் ஸ்பெஷலானது என ரோகித் சர்மா கூறியுள்ளார். இது பற்றி பேருந்தில் பயணித்த போது அவர் கூறியதாவது, 2007 வித்தியாசமான உணர்வு. அந்த பயணத்தை நாங்கள் மதிய நேரத்தில் துவங்கினோம். இந்த பயணத்தை மாலை நேரத்தில் துவங்கினோம். 2007 வெற்றியை மறக்க முடியாது. ஏனெனில் அது என்னுடைய முதல் உலகக் கோப்பை.

ரசிகர்களுக்காகவும்...

ஆனால் இது கொஞ்சம் அதிகம் ஸ்பெஷல். ஏனெனில் இம்முறை நான் நமது அணியை பெருமையுடன் வழி நடத்தினேன். இந்த வெற்றி எங்களுக்கு மட்டுமல்ல மொத்த நாட்டுக்கும் எவ்வளவு பெரிது என்பதை ரசிகர்கள் காண்பிக்கின்றனர். எனவே ரசிகர்களுக்காகவும் இதை சாதித்ததில் நான் மகிழ்ச்சியடைகிறேன். இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 4 months 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 6 months 1 week ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 6 months 1 week ago
View all comments

வாசகர் கருத்து