முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஐ.சி.சி.யின் ஜூன் மாத வீரர் விருது: பரிந்துரை பட்டியலில் ரோகித் சர்மா, பும்ரா

வெள்ளிக்கிழமை, 5 ஜூலை 2024      விளையாட்டு
Rogit-Sarma 2024-07-03

Source: provided

துபாய் : ஐ.சி.சி.யின் ஜூன் மாத வீரர் விருது பரிந்துரை பட்டியலில் இந்திய வீரர்கள் ரோகித் சர்மா, பும்ரா இடம்பிடித்துள்ளனர்.

தொடர் நாயகன்... 

ஐ.சி.சி. ஒவ்வொரு மாதமும் சிறந்த கிரிக்கெட் வீரர் மற்றும் வீராங்கனையை தேர்வு செய்து ஐ.சி.சி கவுரவித்து வருகிறது. அதன்படி ஜூன் மாதத்திற்கான சிறந்த வீரர் மற்றும் வீராங்கனையை தேர்வு செய்ய தலா 3 வீரர் மற்றும் வீராங்கனைகளை ஐ.சி.சி அறிவித்துள்ளது. இந்நிலையில், ஜூன் மாதத்திற்கான சிறந்த வீரர் விருதுக்கான பரிந்துரை பட்டியலில் டி20 உலகக் கோப்பை தொடரில் அசத்திய இந்திய கேப்டன் ரோகித் சர்மா மற்றும் தொடர் நாயகன் விருது வென்ற ஜஸ்பிரித் பும்ரா ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். இவர்களுடன் டி20 உலகக் கோப்பை தொடரில் அதிக ரன்கள் அடித்து அசத்திய ஆப்கானிஸ்தானை சேர்ந்த குர்பாசும் இடம்பெற்றுள்ளார்.

சிறந்த வீராங்கனை... 

இதேபோல், ஜூன் மாதத்திற்கான சிறந்த வீராங்கனை விருதுக்கான பரிந்துரை பெயர் பட்டியலில் இலங்கையின் விஷ்மி குணரத்னே, இந்தியாவின் ஸ்மிரிதி மந்தனா, இங்கிலாந்தின் மாயா பவுச்சியர் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 4 months 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 6 months 1 week ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 6 months 1 week ago
View all comments

வாசகர் கருத்து