முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நன்றி தெரிவித்த கோலி

வெள்ளிக்கிழமை, 5 ஜூலை 2024      விளையாட்டு
Virat-Kohli 2023 08 11

Source: provided

20 ஓவர் உலகக் கோப்பையை 17 ஆண்டுகளுக்கு பிறகு இந்திய அணி சொந்தமாக்கியதால் ஒட்டுமொத்த தேசமும் வெற்றியை உற்சாகமாக கொண்டாடி மகிழ்ந்தது. இந்த வெற்றி கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக வீரர்கள் மும்பையில் திறந்த பஸ்சில் ஊர்வலமாக அழைத்து செல்லப்பட்டனர். கிரிக்கெட் வீரர்களை காண ரசிகர்கள் படையெடுத்ததால் மும்பை நகரமே சில மணி நேரம் ஸ்தம்பித்து போனது. இந்த வெற்றி பேரணி மரைன் டிரைவ் பகுதியில் இருந்து வான்கடே மைதானம் வரை செல்ல ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதனால் மும்பை கடற்கரை பகுதியில் 7 முக்கிய சாலைகள் மூடப்பட்டன. 10 இடங்களில் வாகன நிறுத்தத்துக்கு தடை விதிக்கப்பட்டது. 

பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டு இருந்தது. இரவு 7. 30 மணிக்கு வீரர்கள் திறந்த பஸ்சில் உலகக் கோப்பையுடன் பேரணியாக சென்றனர். பின் வான்கடே மைதானத்தில் பாராட்டு விழா நடைபெற்றது. இந்நிலையில் இந்த பேரணியை வெற்றிகரமாக நடத்த துணை புரிந்த மும்பை போலீசுக்கு விராட் கோலி நன்றி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் வலைத்தளப்பக்கத்தில் வெளியிட்ட பதிவில் தெரிவித்திருப்பதாவது, மும்பை போலீசின் அனைத்து அதிகாரிகள் மற்றும் பணியாளர்களுக்கு ஆழ்ந்த மரியாதை மற்றும் மனமார்ந்த நன்றி மற்றும் இந்தியாவின் வெற்றி அணிவகுப்பின் போது ஒரு அற்புதமான வேலை செய்ததற்காக மும்பை கமிஷனருக்கும் நன்றிகள். உங்கள் அர்ப்பணிப்பு மற்றும் சேவை மிகவும் பாராட்டப்படுகிறது. ஜெய் ஹிந்த். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

_______________________________________________________________________

பி.வி.சிந்து புதிய நம்பிக்கை

பாரிஸ் ஒலிம்பிக்கில் பதக்கத்தின் நிறத்தை மாற்றுவேன் என நம்புவதாக இந்திய பாட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்து தெரிவித்துள்ளார். பிரதமர் மோடி ஒலிம்பிக்கில் பங்கேற்கும் வீரர்கள், வீராங்கனைகளை சந்தித்து பேசி இருந்தார். அப்போது காணொளி அழைப்பு மூலம் பிரதமருடன் சிந்து பேசி இருந்தார். “ஒலிம்பிக்கில் மூன்றாவது முறையாக இந்த சார்பில் நான் பங்கேற்கிறேன். 2016 ஒலிம்பிக்கில் நான் வெள்ளி வென்று இருந்தேன். 2020 ஒலிம்பிக்கில் வெண்கலம் வென்று இருந்தேன். இந்த முறை பதக்கத்தின் நிறத்தை மாற்றுவேன் என நம்புகிறேன். மீண்டும் ஒரு முறை ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்வேன் என்பதில் உறுதியாக உள்ளேன்.

இந்த முறை ஒலிம்பிக்கில் நிறைய அனுபவத்துடன் கலந்து கொள்கிறேன். ஆனால், இந்த பயணம் அவ்வளவு எளிதானதாக இருக்காது. இருந்தாலும் எனது சிறந்த முயற்சியை நான் வெளிப்படுத்துவேன். இந்தியா சார்பில் பாரிஸ் ஒலிம்பிக்கில் பங்கேற்கும் அனைவருக்கும் என வாழ்த்துகள். இதில் அழுத்தம் இருக்கும். உங்கள் கடின உழைப்பு இங்கு அழைத்து வந்துள்ளது. இதனை மற்றும் ஒரு விளையாட்டு தொடராக எடுத்துக்கொண்டு விளையாட வேண்டும். நூறு சதவீத திறனை வெளிப்படுத்தினால் போதுமானது” என பி.வி.சிந்து தெரிவித்தார்.

_______________________________________________________________________

அடுத்த சுற்றில் டாமி பால் 

டென்னிஸ் போட்டியில் ஆண்டுதோறும் 4 வகையான கிராண்ட்ஸ்லாம் என்ற உயரிய அந்தஸ்து பெற்ற டென்னிஸ் போட்டிகள் நடத்தப்படுகின்றன. இதில் மிகவும் கவுரவமிக்கதாக கருதப்படும் நூற்றாண்டு காலம் பழமையான விம்பிள்டன் டென்னிஸ் தொடர் லண்டனில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இந்த தொடரில் நேற்று நடைபெற்ற ஆண்கள் ஒற்றையர் பிரிவின் 3வது சுற்று ஆட்டம் ஒன்றில் அமெரிக்காவின் டாமி பால், கஜகஸ்தானை சேர்ந்த அலெக்சாண்டர் பப்ளிக்கை எதிர்கொண்டார். 

இந்த ஆட்டத்தில் ஆரம்பம் முதலே அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய டாமி பால் 6-3, 6-4, 6-2 என்ற நேர் செட் கணக்கில் அலெக்சாண்டர் பப்ளிக்கை வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு (ரவுண்ட் ஆப் 16) முன்னேறினார். விம்பிள்டன் டென்னிஸ் போட்டிபெண்கள் ஒற்றையர் பிரிவு 3வது சுற்றில் இத்தாலி வீராங்கனையான ஜாஸ்மின் பவுலினி, கனடா வீராங்கனை பியன்கா ஆண்ட்ரிஸ் உடன் மோதினார். இதில் பவுலினி 7-6 (7-4), 6-1 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று நான்காவது சுற்றுக்கு முன்னேறினார்.

_______________________________________________________________________

சிக்கந்தர் குறித்து பெருமிதம்

இந்தியாவுடனான டி20 தொடரில் விளையாடவிருக்கும் ஜிம்பாப்வே அணி, பேட்டர் சிகந்தர் ராஸா தலைமையில் திங்கள்கிழமை அறிவிக்கப்பட்டது. இம்மாதம் ஜிம்பாப்வே செல்லும் நடப்பு உலக சாம்பியனான இந்திய அணி, 5 ஆட்டங்கள் கொண்ட டி20 தொடரில் அந்நாட்டு அணியுடன் விளையாடுகிறது. இந்தத் தொடர், இன்று (6-ஆம் தேதி) தொடங்குகிறது. இதற்கான ஜிம்பாப்வே அணி, பல இளம் வீரர்களுடன் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அனுபவமிக்க பேட்டரான சிகந்தர் ராஸா அதற்கு கேப்டனாக்கப்பட்டுள்ளார். எனினும் மூத்த வீரர்களான கிரெய்க் எர்வின், ஷான் வில்லியம்ஸ், ரையான் பர்ல் உள்ளிட்டோர் இந்த அணியில் சேர்க்கப்படவில்லை.

இந்நிலையில் ஜிம்பாப்வே அணியின் பயிற்சியாளஎர் கூறியதாவது. ,சிக்கந்தர் ராஸா மாதிரியான ஒருவர் அணியை வழிநடத்துவதில் நாங்கள் அதிர்ஷ்டமாக கருதுகிறோம். அவருக்கு டி20களில் அதிகமான அனுபவம் இருக்கிறது. அவர்தான் அணியை முன்னிறு நடத்தவேண்டுமென விரும்புகிறோம். ஓய்வறையில் வீரர்களுடன் பேசுவது அவர்களை எப்படி கையாள்வது என எல்லாம் சரியாக செய்கிறார். அவரது பேட்டும் பந்தும் மட்டுமே பேச வேண்டுமென நாங்கள் நினைக்கிறோம் என்றார்.

_______________________________________________________________________

ஹார்திக்கை பாராட்டிய ரோஹித்

டி20 உலகக் கோப்பை சாம்பியனாகி நாடு திரும்பிய இந்திய அணிக்கு, மும்பையில் வியாழக்கிழமை உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பார்படோஸிலிருந்து புதன்கிழமை புறப்பட்ட இந்திய அணியினர், 16 மணி நேர இடைநில்லா பயணத்துக்குப் பிறகு வியாழக்கிழமை காலை 6 மணியளவில் தில்லி விமான நிலையம் வந்தடைந்தனர். பின்னர் மும்பை வந்தனர். ஊர்வலத்தின் நிறைவாக இரவில் வான்கடே மைதானத்தை அடைந்த இந்திய அணியினருக்கு, அங்கு நடைபெற்ற நிகழ்ச்சியில் ரூ.125 கோடி பரிசுத் தொகைக்கான காசோலை வழங்கப்பட்டது. மைதானத்தில் உற்சாகப் பாடல் ஒலிக்க, இந்திய வீரர்களும் நடனமாடிக் கொண்டாடினர்.

இதில் பேசிய ரோஹித் சர்மா, “ஹார்திக் முக்கியமான அந்தக் கடைசி ஓவரை வீசினார். எவ்வளவு ரன்னுக்குள் கட்டுப்படுத்த வேண்டும் என்பதையெல்லாம் தாண்டி அது மிகவும் அழுத்தமிக்க தருணம். அந்த ஓவரை ஹார்திக் சிறப்பாக வீசினார். அவருக்கு தலைவணங்குகிறேன்” என்றார். இதற்கு வான்கடே மைதானம் ஹார்திக் ஹார்திக் என கூச்சலிட்டது. ஹார்திக் நெகிழ்ச்சியில் ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்தார். மும்பை ரசிகர்கள் ஐபில் போது ஹார்திக்கை கிண்டல் செய்தனர். தற்போது பாராட்டுகிறார்கள். இது நெகிழ்ச்சியாக இருக்கிறதென கிர்க்கெட் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.

_______________________________________________________________________

அரையிறுதியில் அர்ஜென்டினா

கோபா அமெரிக்கா கால்பந்து தொடரின் முதல் காலிறுதி ஆட்டம் இந்திய நேரப்படி இன்று காலை நடைபெற்றது. இதில் அர்ஜென்டினா- ஈகுவடார் அணிகள் மோதின. ஆட்டம் தொடங்கிய 35-வது நிமிடத்தில் அர்ஜென்டினா வீரர் மார்ட்டினேஸ் கோல் அடித்தார். கார்னர் வாய்ப்பில் தலையால் முட்டி கோல் அடித்தார். இதனால் அர்ஜென்டினா முதல் பாதி நேரத்தில் 1-0 என முன்னிலைப் பெற்றது. 2-வது பாதி நேரத்தில் ஈகுவடார் அணி வீரர்கள் கோல் அடிக்க முயற்சித்தனர். ஆனால் பலன் கிடைக்கவில்லை. ஸ்டாப்பேஜ் (காயம் மற்றும் போட்டி நிறுத்தம் ஆகியவற்றை கணக்கில் கொண்டு வழங்கப்படும் கூடுதல் நேரம்) நேரத்தில் 91-வது நிமிடத்தில் ஈகுவடார் அணிக்கு கோல் அடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. சக வீரர் பாஸ் செய்த பந்தை கெவின் ரோட்ரிக்ஸ் தலையால் முட்டி கோலாக்கினார். இதனால் போட்டி 1-1 என சமநிலையில் முடிந்தது.

இதனால் பெனால்டி ஷூட்அவுட் முறை கடைபிடிக்கப்பட்டது. அர்ஜென்டினா முதலில் ஆரம்பிடித்தது. மெஸ்சி முதல் வாய்ப்பை பயன்படுத்தினார். பந்து கோல் கம்பத்தில் பட்டு வெளியே சென்றது. இதனால் மெஸ்சி ஏமாற்றம் அடைந்தார். அடுத்து ஈகுவடாரின் முதல் வாய்ப்பில் அந்நாட்டு வீரர் அடித்த பந்தை அர்ஜென்டினா கோல் கீப்பர் சிறப்பாக தடுத்தார். இதனால் 0-0 என ஆனது. அதன்பின் அர்ஜென்டினா தொடர்ந்து 3 வாய்ப்புளிலும் கோல் அடித்தது. ஈகுவடார் 2-வது வாய்ப்பிலும் கோல் அடிக்காமல் தவறவிட்டது. 3-வது மற்றும் 4-வது முறை கோல் அடித்தது. இதனால் அர்ஜென்டினா 3-2 என முன்னிலையில் இருந்தது. ஐந்தாவது மற்றும் கடைசி வாய்ப்பை அர்ஜென்டினா கோலாக மாற்றியது. இதனால் 4-2 என அர்ஜென்டினா வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறியது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 4 months 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 6 months 1 week ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 6 months 1 week ago
View all comments

வாசகர் கருத்து