முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பாகிஸ்தானில் 6 நாட்களுக்கு சமூக வலைதளங்களுக்கு தடை

சனிக்கிழமை, 6 ஜூலை 2024      உலகம்
YouTube 2024-03-27

Source: provided

லாகூர் : பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் வரும் 13-ம் தேதி முதல் 18-ம் தேதி வரை யு டியூப், வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக ஊடகங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தானில் வரும் 17-ம் தேதி முஹரம் ஆஷுரா கடைப்பிடிக்கப்படுகிறது. இதையொட்டி, அங்குள்ள பஞ்சாப் மாகாணத்தில் வரும் 13-ம் தேதி முதல் 18-ம் தேதி வரை சமூக ஊடகங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. 

பஞ்சாப் மாகாண முதல்வர் மரியம் நவாஸ் தலைமையிலான அரசு இதனை அறிவித்துள்ளது. இது தொடர்பான பரிந்துரையை அந்நாட்டில் மத்தியில் உள்ள ஷெபாஸ் ஷெரீப் தலைமையிலான அரசிடம் முன் வைக்கப்பட்டுள்ளது.

வன்முறையை தடுக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது. இதன் வாயிலாக வெறுப்பு பேச்சு மற்றும் தவறான கருத்து, தகவல் பகிரப்படுவது தடுக்கப்படும் என பஞ்சாப் மாகாண அரசு தெரிவித்துள்ளது.

பாகிஸ்தான் பொதுத்தேர்தலின் போது, தேர்தல் முடிவுகளை சீர்குலைக்க முயன்ற குற்றச்சாட்டின் அடிப்படையில், பிரபல சமூக வலைதளமான டுவிட்டர் பக்கத்துக்கு அந்நாட்டு அரசு கடந்த பிப்ரவரி முதல் தடை விதித்து உள்ளது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 4 months 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 6 months 1 week ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 6 months 1 week ago
View all comments

வாசகர் கருத்து