முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பாராளுமன்றத்தில் வரும் 12-ம் தேதி நம்பிக்கை வாக்கெடுப்பு கோர நேபாள பிரதமர் பிரசந்தா முடிவு

சனிக்கிழமை, 6 ஜூலை 2024      உலகம்
Nepal 2024-05-20

Source: provided

 காத்மண்டு : நேபாள பிரதமர் பிரசந்தா வரும் 12-ம் தேதி பாராளுமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பு கோர முடிவு செய்து உள்ளார். 

நேபாள அரசியலில் ஏற்பட்டுள்ள திடீர் மாற்றத்தால்,ஆளும் நேபாள கம்யூனிஸ்ட் கட்சி (மாவோயிஸ்ட் மையம்), அதிகாரத்தை இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. நேபாள கம்யூனிஸ்ட் கட்சி (மாவோயிஸ்ட் மையம்) நிர்வாகிகள் கூட்டத்தில் பேசிய பிரதமர் பிரசந்தா, பதவியை ராஜினாமா செய்யப் போவதில்லை என்றும், பாராளுமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பை எதிர்கொள்ளப் போவதாகவும் தெரிவித்திருந்தார். 

இந்நிலையில், பிரதமர் பிரசந்தா வரும் 12-ம் தேதி பாராளுமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பு கோர உள்ளார். இது தொடர்பாக பாராளுமன்ற செயலகத்துக்கு பிரதமர் கடிதம் எழுதியுள்ளார். ஒன்றரை ஆண்டுகளாக பிரதமராக இருந்து வரும் பிரசந்தா, இதுவரை 4 முறை நம்பிக்கை வாக்கெடுப்பு கோரி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 4 months 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 6 months 1 week ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 6 months 1 week ago
View all comments

வாசகர் கருத்து