முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சென்னையில் பா.ஜ.க. செயற்குழு கூட்டம் : மத்திய அமைச்சர்கள் சிவராஜ் சிங், எல்.முருகன் பங்கேற்பு

சனிக்கிழமை, 6 ஜூலை 2024      தமிழகம்
BJP 2024-03-05

Source: provided

சென்னை : சென்னையில் நடந்த தமிழக பா.ஜ.க.வின் மாநில செயற்குழு கூட்டத்தில் மத்திய அமைச்சர்கள் சிவராஜ்சிங் சவுகான், எல்.முருகன் கலந்து கொண்டனர் 

தமிழக பா.ஜ.க.வின் மாநில செயற்குழு கூட்டம் சென்னை வானகரம் பகுதியில் உள்ள ஸ்ரீவாரி திருமண மண்டபத்தில் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில், மத்திய அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான், மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், கட்சியின் மாநிலத் தலைவர் கே. அண்ணாமலை மற்றும் கட்சியின் மூத்த நிர்வாகிகள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

இந்தக் கூட்டத்தில், மாநில தலைவர் அண்ணாமலை பேசுகையில், தமிழகத்தின் அனைத்து இடங்களிலும்கூட, ஒரு சாதாரண மனிதனின் உயிருக்கு உத்தரவாதம் இல்லை என்பது போல, தி.மு.க.வின் அரசாங்கம் செயல்பட்டு கொண்டிருக்கிறது. தமிழகம் இதுபோல் வன்முறை இணைந்த மாநிலமாக இதற்குமுன் எப்போதும் பார்த்ததில்லை.  மேலும் முன்எப்போதும் இல்லாத அளவுக்கு தமிழகத்தில் கள்ளச் சாராயம் ஆறாக ஓடிக்கொண்டிருக்கிறது.   

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சந்தி சிரித்துக் கொண்டிருக்கிறது. சாமானியர்களின் குரலை தி.மு.க. அரசு நசுக்கிக் கொண்டிருக்கும்போது, அடுத்த இரண்டு ஆண்டுகளில் தீய சக்தியின் ஆட்சி தூக்கி எறியப்படும் வரை, பா.ஜ.க.வின் குரல் ஒரு சாமானிய மனிதனின் குரலாக ஒலிக்க வேண்டும் என்று  பேசினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 4 months 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 6 months 1 week ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 6 months 1 week ago
View all comments

வாசகர் கருத்து