முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆம்ஸ்ட்ராங் கொலையில் அரசியல் பின்னணி இல்லை : சென்னை காவல் ஆணையர் பேட்டி

சனிக்கிழமை, 6 ஜூலை 2024      தமிழகம்
Sandeeprai-Rathore 2024-01-

Source: provided

சென்னை : ஆம்ஸ்ட்ராங் கொலை பின்னணியில் அரசியல் காரணங்கள் எதுவும் இல்லை என்று சென்னை காவல் ஆணையர் சந்தீப்ராய் ரத்தோர் தெரிவித்துள்ளார். 

பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் நேற்று முன்தினம் இரவு சென்னை பெரம்பூரில் புதிதாக கட்டப்படும் அவரது வீடு அருகே மர்ம நபர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இந்த சூழலில் பகுஜன் சமாஜ் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் 8 பேர் போலீசில் சரணடைந்துள்ளனர். 

ஆம்ஸ்ட்ராங்கை கொலை செய்ததாக ஆற்காடு சுரேஷின் சகோதரர் ஆற்காடு பாலு உள்பட 8 பேர் அண்ணாநகர் துணை ஆணையர் முன் சரணடைந்தனர். சரணடைந்த 8 பேரையும் கைது செய்த போலீசார் இந்த கொலைக்கான காரணம் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த நிலையில், கொலை சம்பவம் தொடர்பாக சென்னை பெருநகர காவல் ஆணையர் சந்தீப்ராய் ரத்தோர், சென்னை  காவல் ஆணையர் அலுவலத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது, 

பகுஜன் சமாஜ் மாநிலத்தலைவர் ஆம்ஸ்ட்ராங்கை அடையாளம் தெரியாத நபர்கள் கத்தியால் தாக்கினர். இதுகுறித்து செம்பியம் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த கொலை வழக்கு தொடர்பாக 8 நபர்கள் கைது செய்யப்பட்டு, புலன் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 

ஆம்ஸ்ட்ராங் உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக போலீசுக்கு எந்த தகவலும் வரவில்லை. ஆம்ஸ்ட்ராங்கிற்கு நேரடியாக அச்சுறுத்தல் இருந்ததாக தகவல் இல்லை. ஒரு தேசியக் கட்சியின் மாநிலத் தலைவர் என்ற அடிப்படையில் உளவுத்துறையினர் அவரது நடமாட்டத்தை கண்காணித்து வந்தனர். 

தேர்தல் நடத்தை விதி காரணமாக காவல்துறையிடம் ஒப்படைத்த துப்பாக்கியை ஜூன் 13-ம் தேதியே ஆம்ஸ்ட்ராங் திரும்பப் பெற்று விட்டார். ஆம்ஸ்ட்ராங் மீது 7 வழக்குகள் இருந்தன. அனைத்து வழக்குகளில் இருந்தும் விடுவிக்கப்பட்டார். தற்போது வரை விசாரணை நடத்தியதில் ஆம்ஸ்ட்ராங் கொலை பின்னணியில் அரசியல் காரணங்கள் எதுவும் இல்லை. 

அரசியல் பழிக்குப்பழியாக கொலை நடக்கவில்லை. கைது செய்யப்பட்டவர்கள் யாரும் தென் மாவட்டங்களை சேர்ந்தவர்கள் இல்லை. தற்போதைய தகவலின்படி ஆம்ஸ்ட்ராங்  சாதிய காரணங்களுக்காக கொலை செய்யப்படவில்லை. 

முழுமையான விசாரணைக்கு பிறகே கொலைக்கான காரணம் தெரிய வரும். சென்னையில் கொலை, குற்றங்கள் குறைந்துள்ளன. சென்னை மிகவும் பாதுகாப்பான நகரம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.   

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 4 months 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 6 months 1 week ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 6 months 1 week ago
View all comments

வாசகர் கருத்து