முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நீதிமன்றத்திற்கும், மக்களுக்கும் புதிய சட்டம் குழப்பத்தை ஏற்படுத்தும்: ப.சிதம்பரம்

சனிக்கிழமை, 6 ஜூலை 2024      தமிழகம்
Chidambaram-2023-05-11

Source: provided

சென்னை : மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய சட்டம் நீதிமன்றத்திற்கும், மக்களுக்கும் குழப்பத்தை ஏற்படுத்தும்  என்று  முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் தெரிவித்தார். 

மத்திய அரசு புதிய 3 குற்றவியல் சட்டங்களை கொண்டு வந்துள்ளது. இதனை எதிர்த்து தமிழகத்தில் போராட்டங்கள் நடந்து வருகின்றன. அரசியலமைப்புக்கு எதிரான, ஜனநாயகத்திற்கு விரோதமான இந்த 3 சட்டங்களையும் திரும்ப பெற வேண்டும் என வலியுறுத்தி தி.மு.க. சட்டத் துறை சார்பில் நேற்று உண்ணாவிரத போராட்டம் நடந்தது.

இந்த உண்ணாவிரத போராட்டத்திற்கு சட்டத்துறை செயலாளர் என்.ஆர்.இளங்கோ தலைமை தாங்கினார். அமைச்சர்கள்  பி.கே.சேகர்பாபு, மா.சுப்பிர மணியன், தயாநிதி மாறன் எம்.பி., சட்டத்துறை தலைவர் இரா.விடுதலை, சட்டத்துறை இணை செயலாளர் இ.பரந்தாமன் எம்.எல்.ஏ. ஆகியோர் முன்னிலை வகித்தனர்.  

சட்டத்துறை இணை செயலாளரும் முன்னாள் எம்.எல்.ஏ. வுமான கே.எஸ்.ரவிச்சந்திரன் வரவேற்றார். இந்த போராட்டத்தில் மத்திய முன்னாள் அமைச்சர் ப.சிதம்பரம், தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, மார்க்சிஸ்ட்  கம்யூனிஸ்டு கட்சி மாநில செயலாளர் கே.பால கிருஷ்ணன், தி.மு.க. அமைப்புச்செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் இரா.முத்தரசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

உண்ணாவிரத போராட்டத்தை பொதுச்செயலாளரும் அமைச்சருமான துரைமுருகன் தொடங்கி வைத்தார். இதில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் பேசியதாவது:-

மத்திய அரசு புதிய குற்றவியல் சட்டங்களை கொண்டு வந்துள்ளது. இதில் 90 முதல் 95 சதவீதம் வரை பழைய சட்ட திருத்தத்தை தான் கொண்டு வந்துள்ளார்கள். ஒட்டு மொத்தமாக பார்க்கும்போது, காப்பி அடித்து உள்ளார்கள். 

இதை சொன்னால் மத்திய அரசு மறுக்கிறது. விவாத்திற்கு தயாராக இருக்கிறார்களா? இது பற்றி பட்டிமன்றமே நடத்தலாம். அதில் பழைய பிரிவு, புதிய பிரிவு குறித்து விவாதிக்கலாம். 513 பிரிவுகளில் 46 பிரிவுகளில் கை வைத்து இருக்கிறார்கள். 

பொதுவாக திருத்தம் செய்ய வேண்டும் என்றால் திருத்தம் கொண்டு வரலாம். அதைபோல் சட்டத்தை நீக்க வேண்டும் என்றால் நீக்கலாம். ஆனால் புதிய சட்டம் என்று கொண்டு வருகிறார்கள். 

உதாரணத்திற்கு 302 கொலை குற்றம் என்பது சிறு குழந்தைக்கு கூட தெரியும். அதை 203-க்கு மாற்றி இருக்கிறார்கள். அதனால் என்னவாகும் என்றால் சட்டத்தில் குழப்பம் வரும். எல்லாரும் மீண்டும் சட்டத்தை படிக்க வேண்டியது வரும். 

நீதித்துறையில் குழப்பம் ஏற்படும். முதலில் சட்டத்தை மாற்ற வேண்டும் என்றால் சட்ட கமிஷனுக்கு அனுப்பியிருக்க வேண்டும். பாராளுமன்ற நிலைக் குழுவில் எல்லாரும் விவாதித்து இருக்க வேண்டும். 

ஆனால் அனைத்து எதிர்க்கட்சிகளையும் வெளியேற்றி விட்டு நிறைவேற்றிருக்கிறார்கள். சட்ட கமிஷனிடம் ஆலோசனை நடத்தாதது தவறு. 3 சட்டப்பிரிவுகளை அவர்கள் நிறைவேற்றியிருக்கிறார்கள் என்றால், இது மோசமான அரசு தானே. 

தற்போது வந்துள்ள சட்டத்தால் ஜாமின் பெறுவது கடினமாக்கப்பட்டுள்ளது. சுப்ரீம் கோர்ட்டில் ஒரு நாளைக்கு 100 ஜாமின் மனுக்கள் வருகிறது. அங்கு போய் எல்லாரும் ஜாமின் வாங்க முடியாது. ஜாமின் கிடைப்பது என்பது சிறிய குற்றத்துக்கு 60 முதல் 90 நாட்கள் வரை ஆகலாம். 

அதை போல போலீஸ் காவல் முறையிலும் அவர்கள் சட்டத்தால் குழப்பம் ஏற்படும். ஒவ்வொரு மாநிலங்களும் புதிய சட்டங்களை எதிர்த்து சட்டசபைகளில் தீர்மானம் கொண்டு வரலாம். அதில் எதை மத்திய அரசு எடுக்கும் என்று சொல்ல முடியாது. 

மாநிலங்களுக்கு சட்டங்களில் திருத்தம் கொண்டுவர அதிகாரம் உண்டு. ஆனால் மத்திய அரசு அதை ஏற்காது. இந்த சட்டத்தால் மக்களுக்கு குழப்பம் தான் ஏற்படும். எனவே, இந்த சட்டத்தை நிறுத்தி வைத்து சட்ட கமிஷனுக்கு அனுப்பி வைக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.  

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 4 months 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 6 months 1 week ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 6 months 1 week ago
View all comments

வாசகர் கருத்து