முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஷியாமா பிரசாத் முகர்ஜி பிறந்த தினம்: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் புகழஞ்சலி

சனிக்கிழமை, 6 ஜூலை 2024      இந்தியா
Modi 2023 07 30

Source: provided

புதுடெல்லி :  பாரதிய ஜன சங்கத்தின் நிறுவனரான ஷியாமா பிரசாத் முகர்ஜியின் பிறந்த தினத்தை முன்னிட்டு, பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் அஞ்சலி செலுத்தி உள்ளனர்.

பிரதமர் மோடி தனது டுவிட்டர் பக்கத்தில், தனது வலிமையான தேசியவாத சிந்தனைகளால் இந்தியாவை பெருமைப்படுத்திய டாக்டர் ஷியாமா பிரசாத் முகர்ஜிக்கு அவரது பிறந்த நாளில் மரியாதைக்குரிய அஞ்சலி. தாய்நாட்டுக்கான அவரது அர்ப்பணிப்பும், தியாகமும் நாட்டு மக்களுக்கு எப்போதும் உத்வேகம் அளிக்கும் என தெரிவித்துள்ளார்.

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா வெளியிட்டுள்ள பதிவில், சிறந்த தேசியவாத சிந்தனையாளர் டாக்டர் ஷ்யாமா பிரசாத் முகர்ஜியின் பிறந்தநாளில் அவரை நினைவு கூர்ந்து அவருக்கு அஞ்சலி செலுத்துகிறேன். 

வங்கத்தை நாட்டின் ஒரு அங்கமாக வைத்திருப்பதற்கான அவரது போராட்டமாக இருந்தாலும் சரி, ஜம்மு-காஷ்மீரை இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதியாக வைத்திருக்க வேண்டும் என்ற உறுதிப்பாட்டுக்காக உச்சபட்ச தியாகம் செய்வதாக இருந்தாலும் சரி, நாட்டின் ஒற்றுமைக்காகவும் ஒருமைப்பாட்டுக்காகவும் போராடுவது பற்றி பேசப்படும் போதெல்லாம் டாக்டர் முகர்ஜி நிச்சயமாக நினைவுகூரப்படுவார்.

அவரது தனித்துவமான முயற்சிகளுக்காக ஒவ்வொரு இந்தியனும் அவருக்குக் கடமைப்பட்டிருக்கிறோம். பாரதிய ஜன சங்கத்தை நிறுவியதன் மூலம் நாட்டுக்கு கருத்தியல் ரீதியில் மாற்று வழிகளை வழங்கிய டாக்டர் ஷ்யாமா பிரசாத் முகர்ஜி, நீண்ட காலம் முதல் வழிகாட்டியாக இருப்பார் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், எங்களின் உத்வேகமும், ஜனசங்கத்தின் நிறுவனருமான டாக்டர். ஷ்யாமா பிரசாத் முகர்ஜியை அவரது பிறந்த நாளில் நினைவு கூர்ந்து அவருக்கு மரியாதை செலுத்துகிறேன். 

அவர் ஒரு சிறந்த சிந்தனையாளர், தத்துவவாதி, தீவிர தேசபக்தர். இந்தியாவின் ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாட்டை உறுதிப்படுத்த, அவர் தனது வாழ்க்கையை அர்ப்பணித்தார். அவரது தியாகத்தை இந்த நாடு என்றும் மறக்காது என தெரிவித்துள்ளார்.

பா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி நட்டா, டெல்லியில் கட்சியின் தலைமையகத்தில் உள்ள ஷியாமா பிரசாத் முகர்ஜியின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 4 months 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 6 months 1 week ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 6 months 1 week ago
View all comments

வாசகர் கருத்து