முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ரஷ்யா, ஆஸ்திரியா சுற்றுப்பயணம் நிறைவு: நாடு திரும்பினார் பிரதமர் நரேந்திர மோடி

வியாழக்கிழமை, 11 ஜூலை 2024      இந்தியா
Modi 2023-08-21

புது டெல்லி, ரஷ்யா, ஆஸ்திரியா பயணத்தை முடித்து கொண்டு பிரதமர் மோடி தனி விமானம் மூலம் நேற்று காலை  டெல்லி வந்தடைந்தார்.

 பிரதமர் மோடி கடந்த 8-ம் தேதி ரஷ்யா சென்றார். அங்கு அவர் ரஷ்ய அதிபர் புடினை சந்தித்தார். பின்னர் இருநாட்டு தலைவர்களும் 22-வது இந்தியா - ரஷ்யா உச்சி மாநாட்டில் பங்கேற்றனர். 

இந்த மாநாட்டில் இருநாட்டு உறவு, வர்த்தகம், ராணுவம் உள்பட பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆலோசித்தனர். பின்னர், உக்ரைன் போர் குறித்தும் விவாதித்தனர். அதை தொடர்ந்து ரஷ்ய பயணத்தை முடித்துக் கொண்டு பிரதமர் மோடி நேற்று முன்தினம் ஆஸ்திரியா சென்றார். 

அங்கு அந்நாட்டு அதிபர் அலெக்சாண்டர் வான்டர் பெல்லன் மற்றும் பிரதமர் கார்ல் நெகம்மரை இந்திய பிரதமர் மோடி சந்தித்தார். இந்த சந்திப்பின்போது இருநாட்டு உறவு, வர்த்தகம் உள்பட பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. 

இதனை தொடர்ந்து ஆஸ்திரியாவாழ் இந்தியர்கள் மத்தியில் பிரதமர் மோடி உரையாற்றினார்.  இந்நிலையில், ரஷ்யா, ஆஸ்திரியா பயணத்தை முடித்த பிரதமர் மோடி தனி விமானம் மூலம் நேற்று காலை  டெல்லி வந்தடைந்தார். அதன் பின்னர் அங்கிருந்து பிரதமர் மாளிகைக்கு திரும்பினார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 month 4 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 month 4 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 2 months 4 days ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 4 days ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 4 months 4 days ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 4 months 4 days ago
View all comments

வாசகர் கருத்து