முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டெல்லியில் மாணவர்கள் 4-வது நாளாக தொடர் போராட்டம்

புதன்கிழமை, 31 ஜூலை 2024      இந்தியா
Delhi-students-2024-07-29

Source: provided

புதுடெல்லி : திடீர் வெள்ளத்தில் சிக்கி டெல்லி ஐஏஎஸ் பயிற்சி மையத்தில் 3 மாணவர்கள் உயிரிழந்த விவகாரத்தில் டெல்லியில் மாணவர்கள் நடத்தி வரும் போராட்டம் புதன்கிழமை நான்காவது நாளை எட்டியுள்ளது. தங்களின் கோரிக்கை இன்னும் நிறைவேற்றப்படவில்லை எனக்கூறி மாணவர்கள் தொடர் போராட்டாத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

போராட்டம் குறித்து அதில் ஈடுபட்டுவரும் மாணவர்களில் ஒருவரான ராபின் கூறுகையில், “சன்ஸ்கிருதி ஐஏஎஸ் மையத்தில் தீ விபத்து ஏற்பட்டபோதும் எங்களுக்கு உத்தரவாதம் வழங்கப்பட்டது. ஆனால் விபத்துக்கு ஒரு வாரத்துக்கு பின்னர் மையம் மீண்டும் திறப்பட்டது. வெறும் உத்தரவாதங்களால் எங்களின் போராட்டம் பலவீனப்படுத்தப்படுவதை நாங்கள் விரும்பவில்லை. எங்களுக்கு தேவை நடவடிக்கை.

போலீஸார் எங்களின் போராட்டத்தை திசை திருப்ப முயற்சிக்கின்றனர். மூன்று உயிர்கள் பறிபோயிருக்கிறது. இது சாதாரண விஷயம் இல்லை. இந்தப் போராட்டம் சிறிய அளவிலேயே நடக்கிறது அது மிகப்பெரிய அளவில் மாறவேண்டும். எங்களின் கோரிக்கைகளை நிறைவேற்றப்படும் வரை போராட்டத்தை கைவிட மாட்டோம்” என்றார்.

அண்மையில் பெய்த கனமழை காரணமாக டெல்லியில் உள்ள ராவ் ஐஏஎஸ் பயிற்சி மையத்தின் தரைதளத்துக்குள் திடீரென வெள்ளம் பெருக்கெடுத்தது. அங்கு பயிற்சி மையத்தின் நூலகம் செயல்பட்டு வந்துள்ளது. இதனால், அங்கு குறிப்பெடுத்துக் கொண்டிருந்த ஏராளமான மாணவர்கள் வெள்ளத்தில் சிக்கிக் கொண்டனர். இதில், 2 மாணவிகள், ஒரு மாணவர் நீரில் மூழ்கி உயிரிழந்தனர். இதனைத் தொடர்ந்து மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 4 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 6 months 3 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 6 months 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து