முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பஞ்சாப், மணிப்பூர் உள்ளிட்ட 6 மாநில கவர்னர்கள் பதவியேற்பு

புதன்கிழமை, 31 ஜூலை 2024      இந்தியா
Punjab 2024 07 31

Source: provided

புதுதில்லி : பஞ்சாப், மணிப்பூர் மற்றும் ஜார்கண்ட் உள்ளிட்ட 6 மாநில புதிய கவர்னர்கள் புதன்கிழமை பதவியேற்றுக் கொண்டனர்.

பஞ்சாப் மாநிலத்தின் புதிய கவர்னராகவும், சண்டிகர் நிர்வாகியாகவும் குலாப் சந்த் கட்டாரியா புதன்கிழமை பஞ்சாப் கவர்னர் மாளிகையில் பதவியேற்றார். அவருக்கு பஞ்சாப் மற்றும் ஹரியாணா உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ஷீல் நாகு பதவிப் பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார். பஞ்சாபின் 30 ஆவது கவர்னராக கட்டாரியா பதவியேற்றுள்ளார். பதவியேற்பு விழாவில் முதல்வர் பகவந்த் மான், அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் மற்றும் பஞ்சாப் மற்றும் யூனியன் பிரதேசத்தின் மூத்த அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

ஜார்க்கண்ட் மாநிலத்தின் புதிய கவர்னராக முன்னாள் மத்திய அமைச்சர் சந்தோஷ் குமார் கங்வார் புதன்கிழமை பதவியேற்றுக் கொண்டார்.ஜார்க்கண்ட் மாநிலத்தின் புதிய கவர்னராக முன்னாள் மத்திய அமைச்சர் சந்தோஷ் குமார் கங்வார் புதன்கிழமை பதவியேற்றுக் கொண்டார். 

ஜார்க்கண்ட் மாநிலத்தின் புதிய கவர்னராக முன்னாள் மத்திய அமைச்சர் சந்தோஷ் குமார் கங்வார் புதன்கிழமை பதவியேற்றுக் கொண்டார். ராஞ்சியில் உள்ள கவர்னர் மாளிகையில் அவருக்கு ஜார்க்கண்ட் உயர் நீதிமன்றத்தின் தற்காலிக தலைமை நீதிபதி சுஜித் நாராயண் பிரசாத் பதவி மற்றும் ரகசிய காப்பு பிரமாணம் செய்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில், முதல்வர் ஹேமந்த் சோரன் மற்றும் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்

மணிப்பூர் கவர்னராக லக்ஷ்மண் பிரசாத் ஆச்சார்யா புதன்கிழமை பதவியேற்றார்.மணிப்பூர் கவர்னராக லக்ஷ்மண் பிரசாத் ஆச்சார்யா புதன்கிழமை பதவியேற்றார்.  சிக்கிமின் 16வது கவர்னராக பாஜக மூத்த தலைவர் ஓம் பிரகாஷ் மாத்தூர் நேற்று பதவியேற்றுக் கொண்டார்.கவர்னர் மாளிகையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சிக்கிம் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி விஸ்வநாத் சோமாத்தர் அவருக்குப் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.

அஸ்ஸாம் கவர்னராக நியமிக்கப்பட்ட லக்ஷ்மண் பிரசாத் ஆச்சார்யாவின் பதவிக்காலம் முடிவடைந்த நிலையில், 72 வயதான மாத்தூர் சிக்கிம் மாநிலத்தின் புதிய கவர்னராகப் பதவியேற்றுள்ளார். இந்த விழாவில் சிக்கிம் முதல்வர் பிரேம் சிங் தமாங், அமைச்சர்கள் மற்றும் மூத்த அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

சத்தீஸ்கரின் பத்தாவது கவர்னராக ராமன் டேக்கா நேற்று பதவியேற்றுக் கொண்டார். ராமன் டேக்காவுக்கு சத்தீஸ்கர் உயர் நீதிமன்றத் தலைவர் ரமேஷ் சின்ஹா பதவிப் பிரமாணமும், ரகசிய காப்புப் பிரமாணமும் செய்துவைத்தார். விழாவையொட்டி செய்தியாளர்களுடன் பேசிய அவர், சத்தீஸ்கர் கவர்னராக இருப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். மாநிலத்தின் வளர்ச்சிக்குப் பாடுபடுவேன். அஸ்ஸாம் (அவரது சொந்த மாநிலம்) மற்றும் சத்தீஸ்கர் இடையே நீண்ட உறவு உள்ளது. அது மேலும் வளரும், இரண்டு மாநிலங்களுக்கு இடையேயான பிணைப்பை வலுப்படுத்த முயற்சிப்பதாகவும் அவர் கூறினார்.

இதற்கிடையே தெலுங்கானா கவர்னராக ஜிஷ்ணு தேவ் வர்மா பதவியேற்றார். தெலுங்கானா கவர்னராக தற்போதைய பொறுப்பு கவர்னர் சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு பதிலாக ஜிஷ்ணு தேவ் வர்மாவை ஜனதிபதி நியமித்துள்ளார். தெலுங்கானா உருவானதில் இருந்து 4வது கவர்னராக ஜிஷ்ணு நேற்று மாலை பதவியேற்றார். அவருக்கு ஐகோர்ட்டு தலைமை நீதிபதி அலோக் ஆராடே பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 4 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 6 months 3 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 6 months 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து