முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நீதிபதிகளுக்கு சம்பளம், பணப்பலன்கள்:மாநிலங்களின் தலைமைச் செயலர்கள் நேரில் ஆஜராக சுப்ரீம் கோர்ட் உத்தரவு

வியாழக்கிழமை, 11 ஜூலை 2024      இந்தியா
Supreme-Court 2023-04-06

Source: provided

புதுடெல்லி: நீதிபதிகள், நீதித்துறை அதிகாரிகளுக்கு சம்பளம், பணப்பலன்கள் அளிக்காத விவகாரத்தில் தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களின் தலைமைச் செயலாளர், நிதித்துறை செயலாளர் வரும் 23ம் தேதி நேரில் ஆஜராக சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது. 

நீதித்துறை அதிகாரிகளுக்கு ஊதியம், பணப்பலன்களை 2வது தேசிய நீதிசார் ஊதியக்குழுவின் பரிந்துரைளை அமல்படுத்த மாநிலங்களுக்கு சுப்ரீம் கோர்ட் ஏற்கனவே உத்தரவிட்டிருந்தது. இந்த விவகாரத்தில் அகில இந்திய நீதிபதிகளின் சங்கத்தின் மனுவை சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி டி ஒய் சந்திரசூட் தலைமையிலான அமர்வு விசாரித்து வருகிறது.

இந்த மனு மீதான விசாரணை நேற்று சுப்ரீம் கோர்ட்டில் நீதிமன்றத்திற்கு உதவ நியமிக்கப்பட்ட வழக்கறிஞர் கே.எஸ்.பரமேஸ்வர் ஆஜராகி உத்தரவை செயல்படுத்தாக மாநிலங்களின் விவரத்தை அறிவித்தார். இதை பதிவு செய்துக் கொண்ட சுப்ரீம் கோர்ட், இந்த விவகாரத்தில் ஊதியம் மற்றும் பணப்பலன்களை அளிக்கும் உத்தரவை வரும் 23ம் தேதிக்குள் செயல்படுத்தவும், தமிழ்நாடு உள்பட பல்வேறு மாநில தலைமைச் செயலாளர்கள், நிதித்துறை செயலாளர்கள் நேரில் ஆஜராகும்படியும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 month 5 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 month 5 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 2 months 5 days ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 5 days ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 4 months 5 days ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 4 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து