முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

யூரோ கோப்பை கால்பந்து தொடர்:இங்கி.,-ஸ்பெயின் அணிகள் இறுதி போட்டியில் மோதல்

வியாழக்கிழமை, 11 ஜூலை 2024      விளையாட்டு
11-Ram-55

Source: provided

டார்ட்மண்ட்: நடப்பு யூரோ கோப்பை கால்பந்து தொடரின் இரண்டாவது அரையிறுதி ஆட்டத்தில் நெதர்லாந்து அணியை 2-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது இங்கிலாந்து. இந்த ஆட்டத்தில் இங்கிலாந்து வீரர் வாட்கின்ஸ் பதிவு செய்த லேட் கோல் அந்த அணியின் வின்னிங் கோல் ஆனது. இந்த வெற்றி மூலம் இறுதிக்கு முன்னேறியுள்ள இங்கிலாந்து அணி ஸ்பெயினை எதிர்கொள்கிறது.

நீடிக்கவில்லை...

ஜெர்மனியின் டார்ட்மண்ட் நகரில் இந்தப் போட்டி நடைபெற்றது. இதில் ஆட்டம் தொடங்கிய 7-வது நிமிடத்தில் கோல் பதிவு செய்து முன்னிலை பெற்றது நெதர்லாந்து. அந்த அணியின் ஸேவி சைமன்ஸ், பாக்ஸின் எட்ஜில் இருந்து அடித்த ஷாட் கோல் ஆனது. ஆனால், அந்த முன்னிலை நீண்ட நேரம் நீடிக்கவில்லை.

2-வது பாதியில்...

ஆட்டத்தின் 18-வது நிமிடத்தில் பெனால்டி வாய்ப்பு இங்கிலாந்துக்கு கிடைத்தது. அதை பயன்படுத்தி ஹாரி கேன் கோல் பதிவு செய்தார். ஆட்டம் 1-1 என சமன் ஆனது. அதன் பிறகு இங்கிலாந்து அணிக்கு பல வாய்ப்புகள் கிடைத்தும் அது கோலாக மாறவில்லை. இரண்டாவது பாதி ஆட்டம் தொடங்கியதும் இங்கிலாந்து அணி மாற்றங்களை செய்தது.

90-வது நிமிடத்தில்... 

அந்த வகையில் 81-வது நிமிடத்தில் ஹாரி கேன் களத்தை விட்டு வெளியேறினார். அவருக்கு மாறாக ஆலி வாட்கின்ஸ் உள்ளே வந்தார். கோல் பதிவு செய்வதற்கான ஆக்ரோஷ முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டது. 90-வது நிமிடத்தில் அதற்கான பலனும் இங்கிலாந்துக்கு கிடைத்தது. பால்மர் தந்த பந்தை லாவகமாக எதிரணியின் வலைக்குள் தள்ளி இருந்தார் வாட்கின்ஸ். அதன் பிறகு ஆட்டத்தில் கூடுதலாக ஆறு நிமிடங்கள் ஸ்டாப்பேஜ் டைம் வழங்கப்பட்டது.

இறுதிப்போட்டிக்கு...

90 + 6 நிமிடங்கள் முடிந்ததும் இறுதி விசில் அடிக்கப்பட்டது. அது ஆட்டத்தின் நிறைவை உறுதி செய்தது. அதன் மூலம் இங்கிலாந்து அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. அந்த அணி ஸ்பெயின் உடன் இறுதியில் பலப்பரீட்சை மேற்கொள்கிறது. அயலக மண்ணில் பிரதான கால்பந்து தொடரின் இறுதிப் போட்டிக்கு இங்கிலாந்து அணி முன்னேறியுள்ளது இதுவே முதல் முறை. இதற்கு முன்னர் இங்கிலாந்தில் நடைபெற்ற 1966 உலகக் கோப்பை மற்றும் 2020 யூரோ கோப்பை தொடர் இறுதிப் போட்டியில் அந்த அணி விளையாடி இருந்தது குறிப்பிடத்தக்கது. வரும் ஞாயிற்று கிழமை அன்று நடைபெறும் இறுதிப்போட்டியில் இங்கிலாந்து அணி ஸ்பெயினை எதிர்கொள்கிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 month 4 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 month 4 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 2 months 4 days ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 4 days ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 4 months 4 days ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 4 months 4 days ago
View all comments

வாசகர் கருத்து