முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பும்ராவை புகழ்ந்த பிரெட் லீ

வியாழக்கிழமை, 11 ஜூலை 2024      விளையாட்டு
Bumra 2023 08 18

Source: provided

அனைத்து ஃபார்மெட்டிலும் உலகின் சிறந்த பவுலராக இப்போது இருப்பது பும்ரா தான். புதிய பந்தை கொண்டு பந்து வீசும் போது வேகத்தை கூட்டி வீசுகிறார். போட்டிகளில் விளையாடும் போது அவரது செயல்திறன் மற்றும் சிறந்த தலைமைத்துவ திறன்கள் வெளிப்படுகின்றன. டி20 உலகக் கோப்பை தொடரில் அதிக ரன்கள் கொடுக்காமல் 15 விக்கெட்டுகளை கைப்பற்றி உள்ளார். அவர் அபாரமான பவுலர். அதே போல இந்திய அணியின் பேட்டிங் ஆர்டர் பார்த்தால் ஒவ்வொரு இடத்திலும் ஆதிக்கம் செலுத்தும் வீரர்கள் களமிறங்குகின்றனர். மிடில் ஆர்டர் வலுவாக உள்ளது. விரைந்து ரன் சேர்க்கும் ஹிட்டர்களும் அணியில் உள்ளனர். இந்த பாராட்டுகளுக்கு எல்லாம் அவர்கள் பொருத்தமானவர்கள்” என பிரெட் லீ தெரிவித்திருந்தார்.

தற்போது உலக சாம்பியன்ஷிப் ஆஃப் லெஜெண்ட்ஸ் தொடரில் ஆஸ்திரேலிய அணியை பிரெட் லீ வழிநடத்தி வருகிறார். இந்திய கிரிக்கெட் அணி கடைசியாக கடந்த 2013-ல் ஐசிசி நடத்தும் தொடரில் சாம்பியன் பட்டம் வென்று இருந்தது. சுமார் 11 ஆண்டுகளுக்கு பிறகு இந்தியா ஐசிசி தொடரில் பட்டம் வென்றுள்ளது. இந்தச் சூழலில் பும்ராவை பிரெட் லீ பாராட்டி உள்ளார். ஐசிசி டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் தொடர் நாயகன் விருதை பும்ரா வென்றார். 8 போட்டிகளில் 15 விக்கெட்டுகளை அவர் கைப்பற்றி இருந்தார். அதில் அவரது ஆவரேஜ் 8.26. எக்கானமி ரேட் 4.17.

பி.சி.பி.யில் புதிய சர்ச்சை

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஷாஹீன் ஷா அப்ரிடி, அயர்லாந்து, இங்கிலாந்து சுற்றுப்பயணத்தின்போதும், 2024 டி20 உலகக் கோப்பையின் போதும் தலைமை பயிற்சியாளர் கேரி கிர்ஸ்டன் மற்றும் அணியின் பிற ஊழியர்களிடம் தவறாக நடந்துகொண்டதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 

இதுதொடர்பாக பாகிஸ்தான் ஊடகமான ஜியோ நியூஸ் வெளியிட்டுள்ள செய்தியில், "சமீபத்திய சுற்றுப்பயணங்களின்போது ஷாஹீன் ஷா அப்ரிடி பயிற்சியாளர்கள் கேரி கிர்ஸ்டன், அசார் மஹ்மூத் உள்ளிட்டோர்களிடம் மோசமாக நடந்துகொண்டார். அவருக்கு எதிராக பயிற்சியாளர்கள் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனினும், வீரர்களின் ஒழுங்கு மீறல்கள் குறித்து பாகிஸ்தான் கிரிக்கெட் நிர்வாகத்திடம் பயிற்சியாளர்கள் புகார் அளித்துள்ளனர். இதுதொடர்பான விசாரணை நடைபெற்றுவருகிறது. 

இறுதிக்கு கொலம்பியா தகுதி

கோபா அமெரிக்கா கால்பந்து போட்டியின் முதல் அரையிறுதியில், நடப்பு சாம்பியனான ஆா்ஜென்டீனா 2-0 கோல் கணக்கில் கனடாவை வென்று இறுதி ஆட்டத்துக்குள் நுழைந்தது. இரண்டாவது அரையிறுதி ஆட்டத்தில் உருகுவே கொலம்பியா அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இந்தப் போட்டியில் உருகுவே அணியினால் ஒரு கோல்கூட அடிக்கமுடியவில்லை. கொலம்பிய அணி 39ஆவது நிமிடத்தில் முதல் கோல் அடித்தது. பின்னர் 45’+1 நிமிடத்தில் கொலம்பிய வீரருக்கு ரெட் கார்ட் கொடுக்கப்பட்டது.

இறுதிவரை உருகுவே அணியினால் கோல் அடிக்க முடியாததால் கொலம்பிய அணி 1-0 கோல் கணக்கில் வெற்றி பெற்றது. 15 முறை கோபா அமெரிக்கா கோப்பையை வென்ற உருகுவே அணி ஒரு கோல்கூட அடிக்காமல் அரையிறுதியில் தோல்வியுற்றது அந்நாட்டு ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  கொலம்பிய அணி ஒரேமுறை மட்டுமே கோபா அமெரிக்கா கோப்பையை வென்றுள்ளது. மாறாக ஆா்ஜென்டீனா 15 முறை கோப்பையை வென்றுள்ளதும் குறிப்பிடத்தக்கது. இறுதிப் போட்டி ஜூலை 15 காலை 5.30 மணிக்கு நடைபெற உள்ளது.

ருதுராஜின் ஜாலி பதிவு

ருதுராஜ் கெய்க்வாட் 2024 ஐபிஎல் முதல் சிஎஸ்கே அணியின் கேப்டனாக செயல்படுகிறார். தற்போது இந்திய அணியிலும் இடம் பிடித்துள்ளார். ஜிம்பாப்வே அணிக்கு எதிரான 3ஆவது டி20 போட்டியில் அதிரடியாக விளையாடி 49 ரன்கள் எடுத்தார். இந்தப்போட்டியில் இந்தியா 25 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. டி20யில் அறிமுகமான ருதுராஜ் கெய்க்வாட்டுக்கு தொப்பி வழங்கியுள்ளார்கள். அதில் இருக்கும் எண் 88. 8+8 = 16, 1+6=7. ஏழு என்பது டோனியின் எண்.

சமீக காலமாக 7 எண் எங்கெல்லாம் வருகிறதோ அங்கெல்லாம் தல ஃபார் ஏ ரீசன் (டோனிதான் காரணம்) என்ற ஹேஷ்டேக் பதிவிடப்பட்டு வருகிறது. 2024 ஐபிஎல்முதல் இந்த டிரெண்ட் தொடங்கப்பட்டது. உலகக் கோப்பையில் இந்திய அணி 7 ரன்கள் வித்தியாசத்தில் வென்றதும் குறுப்பிடத்தக்கது.  இந்நிலையில் ருதுராஜ் தனது தொப்பியில் உள்ள எண்ணை 7 வரும்படி கணக்கிட்டு, “நான் டிரெண்டுக்கு முன்பாக இருக்கிறேன்” என ஜாலியாக பதிவிட்டுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 month 5 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 month 5 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 2 months 5 days ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 5 days ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 4 months 5 days ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 4 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து