முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அமிதாப்பச்சனின் பாடலுக்கு நடனமாடிய பா.ஜ.க. எம்.எல்.ஏ. வலைதளங்களில் வீடியோ வைரல்

சனிக்கிழமை, 7 செப்டம்பர் 2024      இந்தியா
BJP-Mla-2024-09-07

 மும்பை, பொழுதுபோக்கு நிகழ்ச்சி ஒன்றில் நடிகர் அமிதாப்பச்சனின் பாடலுக்கு மராட்டிய மாநில பா.ஜ.க. எம்.எல்.ஏ. நடனமாடிய வீடியோ வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 

மராட்டிய மாநிலம் சத்ரபதி சம்பாஜிநகர் மாவட்டத்தில் உள்ள கங்காபூர் சட்டமன்ற தொகுதி பா.ஜ.க. எம்.எல்.ஏ. பிரசாந்த் பாம். இவர்  நிகழ்ச்சி ஒன்றில், பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சனின் ஹிட் பாடலான கைகே பான் பனாரஸ் வாலா  என்ற பாடலுக்கு நடனமாடியுள்ளார். இது தொடர்பான வீடியோ  வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 

மராத்வாடா பிராந்தியத்தில் கனமழை, வெள்ளம் காரணமாக பயிர்கள் நாசமடைந்து விவசாயிகள் தத்தளித்து வருகின்றனர். இந்த நிலையில் எம்.எல்.ஏ. நடனமாடிக் கொண்டிருக்கிறார் என்று பலரும் அவரை விமர்சித்து வருகின்றனர். 

இதனிடையே சிலர் அவரது நடன அசைவுகளை பாராட்டியும் கமெண்ட் செய்துள்ளனர். இது தொடர்பாக பா.ஜ.க.எம்.எல்.ஏ. பிரசாந்த் கூறும் போது, 

 எனது கட்சித் தொண்டர்களுக்காக ஒவ்வொரு ஆண்டும் ஒரு பொழுதுபோக்கு நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. அந்த வகையில் புகழ்பெற்ற சுற்றுலாத் தலமான மயிஸ்மாலில் இந்த ஆண்டு நடந்தது. இந்த நிகழ்ச்சியில் நான் நடனமாடினேன். இதில் எனக்கு எதுவும் தவறாக தெரியவில்லை என்று கூறினார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 3 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 5 months 3 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 5 months 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து