முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உலகின் சிறந்த நாடுகளின் பட்டியலில் முதலிடம் பிடித்த சுவிட்சர்லாந்து 33-வது இடத்தில் இந்தியா

புதன்கிழமை, 11 செப்டம்பர் 2024      இந்தியா
Switzerland

புது டெல்லி, உலகின் சிறந்த நாடுகளின் பட்டியலில் சுவிட்சர்லாந்து முதல் இடம் பிடித்துள்ளது. 

யு.எஸ். நியூஸ் அண்ட் வேர்ல்ட் ரிப்போர்ட் இதழ் 2024-ம்ஆண்டுக்கான உலகின் சிறந்தநாடுகளின் பட்டியலை வெளியிட்டுள்ளது. அந்த பட்டியலில் தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக இம்முறையும் சுவிட்சர்லாந்து முதல் இடம் பிடித்துள்ளது. 2-வதுஇடத்தில் ஜப்பான், 3-வது இடத்தில்அமெரிக்கா, 4-வது இடத்தில் கனடா, 5-வது இடத்தில் ஆஸ்திரேலியா ஆகியவை உள்ளன. 

வாழ்க்கைத் தரம், தொழில்முனைவு, சாகசம், சுறுசுறுப்பு, பாரம்பரியம், கலாச்சார நோக்கம் உட்பட 10 தன்மைகளின் அடிப்படையில் இந்தப் பட்டியல் உருவாக்கப்பட்டுள்ளது. 89 நாடுகள் இடம்பெற்றுள்ள இந்தப் பட்டியலில் இந்தியா 33-வது இடத்தில் உள்ளது. சென்ற ஆண்டு பட்டியலில் இந்தியா 30-வது இடத்தில் இருந்தது குறிப்பிடத்தக்கது. 

 இந்தப் பட்டியலில் முதல் 25 இடங்களில் ஐரோப்பிய நாடுகள் அதிகம் இடம்பெற்றுள்ளன. ஆசியாவிலிருந்து ஜப்பான், சிங்கப்பூர், சீனா, தென் கொரியா ஆகிய நாடுகளே முதல் 25 இடங்களில் உள்ளன. மத்திய கிழக்கு நாடுகளில் ஐக்கிய அரபு அமீரகம் 17-வது இடத்திலும் கத்தார் 25-வது இடத்திலும் உள்ளன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 3 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 5 months 3 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 5 months 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து