முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

3 கார் மற்றும் ரூ. 2 கோடி அசையா சொத்து: வினேஷ் போகத்தின் சொத்து மதிப்பு வெளியீடு

வியாழக்கிழமை, 12 செப்டம்பர் 2024      இந்தியா
Vinesh-Phogat-2024-09-12

சண்டிகர், அரியானா சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் சார்பில் களமிறங்கி உள்ள முன்னாள் மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத்தின் சொத்து மதிப்பு குறித்த தகவல் வெளியாகி உள்ளது. 

ஒலிம்பிக் மல்யுத்தத்தில் அதிக எடை உள்ளதாக கூறி தகுதி நீக்கம் செய்யப்பட்ட வினேஷ் போகத் அரசியலில் குதித்துள்ளார். சமீபத்தில் காங்கிரசில் இணைந்த அவர், அரியானாவின் ஜூலானா தொகுதியில் போட்டியிடுகிறார். அதற்காக தாக்கல் செய்த வேட்புமனு மூலம் அவரின் சொத்து மதிப்பு தெரியவந்துள்ளது.  

அதன்படி அவருக்கு ரூ. 35 லட்சம் மதிப்புள்ள வோல்வோ எக்ஸ்சி 60 கார், 12 லட்சம் மதிப்புள்ள ஹூண்டாய் கிரேடா கார், ரூ. 17 லட்சம் மதிப்புள்ள டொயட்டா இன்னோவா கார் என 3 கார்கள் உள்ளன.  அதில் ஒரு கார் கடன் பெற்று வாங்கி உள்ளார். அதற்காக வட்டி செலுத்தி வருகிறார்.   

2023- 24 நிதியாண்டில் ரூ. 13,85,000 வருமானம் வந்துள்ளது. இதற்காக ரூ. 1.95 லட்சம் வரி கட்டி உள்ளார்.  ரூ. 2 கோடி மதிப்புள்ள அசையா சொத்து உள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 3 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 5 months 3 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 5 months 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து