முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உடல்நலக்குறைவால் மறைந்த சீதாராம் யெச்சூரியின் உடல் தானம்

வியாழக்கிழமை, 12 செப்டம்பர் 2024      இந்தியா
Sitaram-Yechury 2024-09-10

புதுடெல்லி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பொதுச் செயலர் சீதாராம் யெச்சூரியின் உடல், தில்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு தானமாக அளிக்கப்பட்டது.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலர் சீதாராம் யெச்சூரி நெஞ்சக நோய்த் தொற்று காரணமாக சீதாராம் யெச்சூரி கடந்த ஆகஸ்ட் 19-ஆம் தேதி தில்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தொடர்ந்து சிகிச்சைப் பெற்று வந்த நிலையில் கடந்த சில நாள்களாக அவரது உடல்நிலை கவலைக்கிடமாக இருந்தது. இந்நிலையில் சிகிச்சைப் பலனின்றி நேற்று(வியாழக்கிழமை) பிற்பகல் 3.05 மணிக்கு உயிரிழந்தார்.

அவரது மறைவுக்கு அரசியல் தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். சீதாராம் யெச்சூரியின் மறைவையடுத்து அவரது உடல், தில்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு தானமாக அளிக்கப்பட்டது. இதுகுறித்து மருத்துவமனை வெளியிட்டுள்ள அறிக்கையில், 'சீதாராம் யெச்சூரி(72) கடந்த ஆகஸ்ட் 19 ஆம் தேதி நிமோனியா பாதிக்கப்பட்டு அனுமதிக்கப்பட்டார். நேற்று (செப். 12) பிற்பகல் 3.05 மணிக்கு மறைந்தார். மருத்துவக் கல்விக்காகவும் ஆய்வுக்காகவும் அவரது குடும்பத்தினர் அவரது உடலை தானமாக அளித்துள்ளனர்' என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 3 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 5 months 3 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 5 months 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து