முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திருவள்ளூர், கிருஷ்ணகிரியில் நிறுவனங்களை விரிவாக்கம் செய்ய கேட்டர்பில்லர் நிறுவனம் 500 கோடி ரூபாய் முதலீடு: முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் ஒப்பந்தம்

வியாழக்கிழமை, 12 செப்டம்பர் 2024      தமிழகம்
Cm-1-2024-09-12

சென்னை, தமிழகத்தில் ரூ. 500 கோடி முதலீடு செய்ய கேட்டர்பில்லர் நிறுவனத்துடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.இதன்மூலம், திருவள்ளூர் மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களில் உள்ள தங்களின் கட்டுமான கருவிகள் உற்பத்தி நிறுவனங்களை கேட்டர்பில்லர் விரிவாக்கம் செய்யவுள்ளது.

உலகளவில் கட்டுமானம் மற்றும் சுரங்க கருவிகள் உற்பத்தியில் கேட்டர்பில்லர் நிறுவனம் முன்னணி நிறுவனமாக விளங்குகிறது. இந்த நிலையில், அமெரிக்காவின் சிகாகோ நகருக்கு முதலீடுகளை ஈர்ப்பதற்காக பயணம் மேற்கொண்டுள்ள முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் வியாழக்கிழமை பேச்சுவார்த்தைக்கு பிறகு கேட்டர்பில்லர் நிறுவனம் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது. இந்த நிகழ்வுகளின்போது, தொழில் துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா, துறைச் செயலர் வி.அருண் ராய் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

தமிழ்நாட்டுக்கு முதலீடுகளை ஈர்க்கும் வகையில், அமெரிக்காவின் சான்பிரான்சிஸ்கோ மற்றும் சிகாகோ நகரங்களில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பயணம் மேற்கொண்டுள்ளார். தமிழக அரசு வெளியிட்ட தகவலின்படி, செவ்வாய்க்கிழமை வரையில் 14 முன்னணி தொழில் நிறுவனங்களுடன் ரூ.4,350 கோடி முதலீட்டுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் முதல்வர் முன்னிலையில் மேற்கொள்ளப்பட்டுள்ளன. மேலும், உலக அளவில் பல்வேறு முன்னணி நிறுவனங்களின் உயர் அலுவலர்களைச் சந்தித்து தமிழ்நாட்டில் புதிய தொழில் முதலீடுகளை மேற்கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 3 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 5 months 3 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 5 months 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து