முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மேட்டூர் அணை நீர்மட்டம் சரிவு

வியாழக்கிழமை, 19 செப்டம்பர் 2024      தமிழகம்
Mettur-dam-2024-09-19

மேட்டூர், மேட்டூர் அணை நீர்வரத்து சரிவு எதிரொலியாக, இரண்டு நாள்களில் அணையின் நீர்மட்டம் 2.50 அடி சரிந்தது.

கர்நாடக மாநிலத்தில் காவிரியின் நீர் பிடிப்புப் பகுதிகளில் மழை இல்லாத காரணத்தால் மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு படிப்படியாக சரிந்து வருகிறது. செவ்வாய்க்கிழமை காலை வினாடிக்கு 12,083 கன அடி வீதம் வந்து கொண்டிருந்த நீர்வரத்து புதன்கிழமை காலை வினாடிக்கு 4,397 கன அடியாகவும், வியாழக்கிழமை காலை வினாடிக்கு 2,997 கன அடியாகவும் சரிந்துள்ளது.

அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு வினாடிக்கு 23,000 கன அடி வீதமும், கிழக்கு-மேற்கு கால்வாய் பாசனத்திற்கு வினாடிக்கு 700 கன அடி வீதமும் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. பாசனத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவைவிட அணைக்கு வரும் நீரின் அளவு குறைவாக இருப்பதால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் மளமளவென குறைய தொடங்கியுள்ளது. செவ்வாய்க்கிழமை காலை 110.05 அடியாக இருந்த மேட்டூர் அணையின் நீர்மட்டம் வியாழக்கிழமை காலை 107.55 அடியாக சரிந்துள்ளது. இரண்டு நாள்களில் அணையின் நீர்மட்டம் 2.50 அடி சரிந்தது. அணையின் நீர் இருப்பு 74.97 டி.எம்.சியாக உள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 3 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 5 months 3 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 5 months 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து