முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வெளிநாட்டு மாணவர்களுக்கு மேலும் விசா கட்டுப்பாடு: கனடா

வியாழக்கிழமை, 19 செப்டம்பர் 2024      உலகம்
Canadian-PM-Trudeau-2024-09

ஒட்டாவா, வெளிநாட்டு மாணவர்களுக்கு வழங்கும் படிப்பு அனுமதிகளின் எண்ணிக்கையை மேலும் குறைப்பதாக கனடா அரசு  அறிவித்துள்ளது. 

கனடாவில் இந்திய மாணவர்கள் உள்பட வெளிநாட்டு மாணவர்கள் ஏராளமானோர் உயர்கல்வி படித்து வருகிறார்கள். அதே போல் வெளிநாட்டை சேர்ந்த பலர் பணியாற்றி வருகிறார்கள். இதற்கிடையே வெளிநாட்டு தொழிலாளர்களின் எண்ணிக்கைகள் குறைக்கப்படும் என்று கனடா பிரதமர் ட்ரூடோ அறிவித்தார்.

உள்ளூர் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளை அதிகரிக்க இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டது. மேலும் வெளிநாட்டு மாணவர்களுக்கு வழங்கப்படும் விசா எண்ணிக்கை கணிசமான அளவு குறைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. 

கனடாவில்  தற்காலிக குடியிருப்பாளர்களின் எண்ணிக்கையை குறைக்கும் ஒரு பகுதியாக  வெளிநாட்டு மாணவர்களுக்கு வழங்கும் படிப்பு அனுமதிகளின் எண்ணிக்கையை மேலும் குறைப்பதாக அரசு அறிவித்துள்ளது.

இதுகுறித்து பிரதமர் ட்ரூடோ கூறும் போது, இந்த ஆண்டு சர்வதேச மாணவர்களுக்கு 35 சதவீதத்துக்கு குறைவான அனுமதி வழங்குகிறோம். அடுத்த ஆண்டு அந்த எண்ணிக்கை மேலும் 10 சதவீதம் குறையும். குடியேற்றம் நமது பொருளாதாரத்திற்கு ஒரு நன்மை. ஆனால் அதை தவறாக பயன்படுத்திக் கொள்ளும் போது, நாங்கள் ஒடுக்குகிறோம் என்றார். 

கனடாவில் 2023-ம் ஆண்டு 5.09 லட்சம் பேருக்கும், 2024-ம் ஆண்டின் முதல் 7 மாதங்களில் 1.75 பேருக்கும் அனுமதி வழங்கப்பட்டது. தற்போதைய கட்டுப்பாட்டால்  2025-ம் ஆண்டு வழங்கப்பட்ட வெளிநாட்டினருக்கு எண்ணிக்கையை 4.37 லட்சமாக குறைக்கும்.

கனடாவில் உள்ள வெளிநாட்டு மாணவர்களில் சுமார் 40 சதவீதம் பேர் இந்தியாவைச் சேர்ந்தவர்கள். சர்வதேச மாணவர் அனுமதிகளைக் குறைக்கும் கனடா அரசாங்கத்தின் நடவடிக்கையால் இந்திய மாணவர்கள் அமெரிக்கா, இங்கிலாந்து அல்லது ஆஸ்திரேலியா போன்ற நாடுகளை தேர்ந்தெடுக்கும் சூழல் உள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 3 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 5 months 3 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 5 months 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து