முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தங்கம் விலை புதிய உச்சம்

வியாழக்கிழமை, 3 அக்டோபர் 2024      தமிழகம்
Gold 2024-04-06

Source: provided

சென்னை: தங்கம் விலை புதிய உச்சத்தை தொட்டது. சவரனுக்கு ரூ.80 உயர்ந்து நேற்று ரூ.56,880-க்கு விற்பனையானது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.10 உயர்ந்து ரூ.7,110-க்கு விற்பனையானது. 

கடந்த ஜூலை மாதம் வரை தொடர்ந்து அதிகரித்து கொண்டே வந்த தங்கம் விலை, அதே மாதம் 22-ந்தேதி தங்கத்தின் மீதான இறக்குமதி வரியை மத்திய அரசு குறைத்ததன் எதிரொலியாக அன்றைய தினம் அதிரடியாக சவரனுக்கு ரூ.2,200 வரை குறைந்தது. அதன் தொடர்ச்சியாக விலை குறைந்து கொண்டே வந்து ஒரு சவரன் ரூ.51 ஆயிரத்துக்கு கீழ் சென்றது. இதனால், நகை பிரியர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

ஆனால் இந்த ஆறுதல் சில நாட்கள் மட்டுமே நீடித்தது. கடந்த ஆகஸ்ட் மாதம் இறுதியில் இருந்து மீண்டும் தங்கம் விலை உயர ஆரம்பித்தது. அதிலும் கடந்த சில நாட்களாக தாறுமாறாக தங்கம் விலை உயர்ந்துள்ளது. கடந்த மாதம் 24-ந்தேதி தங்கம் ஒரு கிராம் ரூ.7 ஆயிரத்தை தொட்டது. நேற்று முன்தினம் தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 அதிரடியாக உயர்ந்த நிலையில், நேற்று மேலும் உயர்ந்து புதிய உச்சத்தை தொட்டது.

அதன்படி, சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.80 உயர்ந்து ரூ.56,880-க்கு விற்பனையானது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.10 உயர்ந்து ரூ.7,110-க்கு விற்பனையானது. வெள்ளி விலையில் மாற்றமின்றி ஒரு கிராம் ரூ.101-க்கு விற்பனையானது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 5 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 5 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 7 months 6 days ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 6 days ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 9 months 5 days ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 9 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து