முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அசாரூதீனுக்கு சம்மன்

வியாழக்கிழமை, 3 அக்டோபர் 2024      விளையாட்டு
3-Ram-58-1

Source: provided

ஐதராபாத் கிரிக்கெட் சங்கத்தில் ரூ.20 கோடிக்கு நிதி முறைகேடுகள் நடந்ததாக கூறப்படும் பணமோசடி வழக்கில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், காங்கிரஸ் கட்சியின் முன்னாள் எம்.பி.யுமான முகமது அசாருதீனுக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது. 61 வயதான முகமது அசாருதீன் நேற்று பெடரல் ஏஜென்சியின் அலுவலகத்தில் வாக்குமூலம் அளிக்கும்படி அந்த சம்மனில் கேட்டு கொள்ளப்பட்டதாக கூறப்படுகிறது. ஐதராபாத் கிரிக்கெட் சங்கத்தில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் அமலாக்கத்துறை சோதனை நடத்தியதாக கூறப்படும் நிதி முறைகேடுகள் தொடர்பான விசாரணை இது என்று கூறப்படுகிறது.

சிறப்பு கூகுள் டூடுல் வெளியீடு

9-வது பெண்கள் உலகக் கோப்பை தொடர் அமீரகத்தில் உள்ள துபாய் மற்றும் சார்ஜாவில் நேற்று தொடங்கியது. வருகிற 20-ந்தேதி வரை நடக்கும் இந்த கிரிக்கெட் திருவிழாவில் 10 அணிகள் கலந்து கொள்கின்றன. அவை இரு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. 'ஏ' பிரிவில் நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா, இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, நியூசிலாந்து அணிகளும், 'பி' பிரிவில் இங்கிலாந்து, தென்ஆப்பிரிக்கா, வெஸ்ட் இண்டீஸ், வங்காளதேசம், 'புதுமுகம்' ஸ்காட்லாந்து அணிகளும் இடம் பெற்றுள்ளன. ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் இரு பிரிவிலும் முதல் இரு இடங்களை பிடிக்கும் அணிகள் அரைஇறுதிக்கு தகுதி பெறும். நாக்-அவுட் சுற்றில் இருந்து மாற்று நாள் (ரிசர்வ் டே) உண்டு.

இந்த நிலையில் பெண்கள் 20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியை சிறப்பிக்கும் வகையில் கூகுள் தனது முகப்பு பக்கத்தில் சிறப்பு டூடுல் ஒன்றை வெளியிட்டுள்ளது. இணைய தேடு பொறியில் முதன்மை நிறுவனமான கூகுள் சுதந்திர தினம், குடியரசு தினம் போன்ற முக்கிய நாட்கள், பிரபலங்களின் பிறந்த நாட்கள் மற்றும் பண்டிகை நாட்கள், முக்கிய தினங்கள் போன்ற நாட்களில் தனது முகப்பு பக்கத்தில் சிறப்பு டூடுலை வெளியிட்டு சிறப்பிக்கும். அந்த வகையில் தற்போது பெண்கள் 20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியை சிறப்பிக்கும் வகையில் டூடுலை வெளியிட்டுள்ளது. இந்த டூடுல் பலரையும் கவர்ந்து வருகிறது.

வீரேந்திர சேவாக் ஆதரவு

ஹரியானா சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் கிரிக்கெட் வாரிய முன்னாள் தலைவர் ரன்பீர் சிங் மகேந்திரா மகன் அனிருத் சவுத்ரிக்கு ஆதரவாக முன்னாள் கிரிக்கெட் வீரர் வீரேந்திர சேவாக் வீடியோ வெளியிட்டார். ஹரியானாவில் முதல்வர் நயாப் சிங் சைனி தலைமையிலான பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்கு மொத்தமுள்ள 90 சட்டசபை தொகுதிகளுக்கு அக்டோபர் 5ல் தேர்தல் நடக்கிறது. பாஜ, காங்கிரஸ், ஆம் ஆத்மி உட்பட முக்கிய கட்சி வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். ஆட்சியை தக்க வைக்கும் முனைப்பில் பா.ஜ., செயல்பட்டு வருகிறது.

பி.சி.சி.ஐ., முன்னாள் தலைவர் ரன்பீர் மகேந்திராவின் மகனும், நான்கு முறை ஹரியானா முதல்வராக இருந்த பன்சி லாலின் பேரனுமான அனிருத் சவுத்ரி தேர்தலில் போட்டியிடுகிறார். இந்நிலையில், ஹரியானா சட்டசபை தேர்தலில், தோஷம் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் அனிருத் சவுத்ரிக்கு ஆதரவாக மக்கள் ஓட்டளிக்குமாறு, முன்னாள் கிரிக்கெட் வீரர் வீரேந்திர சேவாக் வீடியோ வெளியிட்டார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 5 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 7 months 3 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 7 months 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து