முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சென்னை மெட்ரோ 2-ம் கட்ட திட்டத்திற்கு ரூ.63,246 கோடி நிதியை ஒதுக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல்: பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் நன்றி

வியாழக்கிழமை, 3 அக்டோபர் 2024      இந்தியா
Stalin 2021 11 29

புதுடெல்லி, சென்னை மெட்ரோ 2-ம் கட்ட திட்டத்திற்கு ரூ.63,246 கோடி நிதியை ஒதுக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இதையடுத்து பிரதமர் நரேந்திர மோடிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் நன்றி தெரிவித்துள்ளார்.

ரூ.63,246 கோடி நிதி...

மத்திய அமைச்சரவைக் கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது: சென்னை மெட்ரோ 2-ம் கட்ட திட்டத்திற்கு ரூ.63,246 கோடி நிதியை ஒதுக்கீடு ஒதுக்க மத்திய அமைச்சரை ஒப்புதல் அளித்துள்ளது.

விரிவான திட்டம்... 

வேகமாக வளர்ந்து வரும் நகரமான சென்னை மிக முக்கியமான பொருளாதார மையமாகும். நகரத்திற்கு தேவையான உள்கட்டமைப்பை உருவாக்குவது மிகவும் முக்கியம். பொருளாதார மையமாக சென்னை உள்ளதால் ஒரு விரிவான திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. 118 கிலோ மீட்டர் நீளத்திற்கு 128 மெட்ரோ நிலையங்கள் அமையும் வகையில் மெட்ரோ 2-ஆம் கட்டம் செயல்படுத்தப்பட உள்ளது" என்றார்.

முதல்வர் நன்றி...

இந்நிலையியில்  சென்னை மெட்ரோ 2-ம் கட்ட திட்டத்திற்கு ரூ.63,246 கோடி நிதியை ஒதுக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதற்கு பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் நன்றி தெரிவித்துள்ளார். இதுகுறித்து முதல்வர் தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது., சென்னை மெட்ரோ 2-ம் கட்டத்திற்கு நிதிஒதுக்கக்கோரி கடைசியாக தங்களை டெல்லியில் சந்தித்து நான் கோரிக்கை விடுத்திருந்த நிலையில் அதற்கு ஒப்புதல் அளித்தற்கு நன்றி. தமிழக மக்களின் நீண்ட கால கோரிக்கைக்கு ஒப்புதல் அளித்தன் மூலம் இந்த திட்டம் விரைவில் முடிப்பதற்கான வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். அண்மையில் டெல்லியில் பிரதமர் மோடியை சந்தித்த முதல்வர் மு.க. ஸ்டாலின் மெட்ரோ திட்டத்திற்கு நிதி கோரியிருந்த நிலையில் மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 5 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 5 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 7 months 6 days ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 6 days ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 9 months 5 days ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 9 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து