முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இங்கிலாந்து அணி அறிவிப்பு

திங்கட்கிழமை, 14 அக்டோபர் 2024      விளையாட்டு
14-Ram-58-1

Source: provided

இங்கிலாந்து கிரிக்கெட் அணி பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடி வருகிறது. இதில் முதல் போட்டியில் இன்னிங்ஸ் மற்றும் 47 ரன் வித்தியாசத்தில் இங்கிலாந்து வெற்றி பெற்று தொடரில் 1-0 என முன்னிலையில் உள்ளது. இந்நிலையில், இரு அணிகளுக்கும் இடையிலான 2வது டெஸ்ட் போட்டி முல்தானில் நாளை தொடங்குகிறது. இதையடுத்து இந்த போட்டிக்கான விளையாடும் வீரர்களை இங்கிலாந்து கிரிக்கெட் அணி அறிவித்துள்ளது. கடந்த போட்டியில் களம் இறங்காத கேப்டன் பென் ஸ்டோக்ஸ் இந்த போட்டியில் களம் இறங்குகிறார்.

மேலும், கடந்த போட்டியில் விளையாடிய கஸ் அட்கின்சன் வெளியேற்றப்பட்டு அவருக்கு பதிலாக மேத்யூ பாட்ஸ் அணியில் இடம் பிடித்துள்ளார். பாகிஸ்தானுக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டிக்கான இங்கிலாந்து அணி விவரம்; ஜேக் க்ராவ்லி, பென் டக்கட், ஆலி போப், ஜோ ரூட், ஹாரி புரூக், பென் ஸ்டோக்ஸ் (கேப்டன்), ஜேமி ஸ்மித் (விக்கெட் கீப்பர்), பிரைடன் கார்ஸ், மேத்யூ பாட்ஸ், ஜாக் லீச், சோயப் பஷீர்.

ஆஸ்திரேலிய அணி அறிவிப்பு

பாகிஸ்தான் கிரிக்கெட் அணி தற்போது சொந்த மண்ணில் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் ஆடி வருகிறது. இந்த தொடர் நிறைவடைந்ததும் பாகிஸ்தான் அணி ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் ஆட உள்ளது. இந்த தொடர் அடுத்த மாதம் 4ம் தேதி தொடங்குகிறது. இந்நிலையில், பாகிஸ்தானுக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான ஆஸ்திரேலிய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அணிக்கு பேட் கம்மின்ஸ் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்த அணியில் டிராவிஸ் ஹெட், மிட்செல் மார்ச் ஆகியோர் இடம் பெறவில்லை. இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடருக்காக அவர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. பாகிஸ்தானுக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான ஆஸ்திரேலிய அணி விவரம்; பேட் கம்மின்ஸ் (கேப்டன்), சீன் அப்போட், கூப்பர் கன்னோலி, ஜேக் ப்ரேசர் மெக்குர்க், ஆரோன் ஹார்டி, ஜோஷ் ஹேசில்வுட், ஜோஷ் இங்கிலிஸ், மார்னஸ் லபுஸ்சாக்னே, க்ளென் மேக்ஸ்வெல், மேத்யூ ஷார்ட், ஸ்டீவ் ஸ்மித், மிட்செல் ஸ்டார்க், மார்கஸ் ஸ்டோய்னிஸ், ஆடம் ஜாம்பா.

திலக் தலைமையில் அணி

வளர்ந்து வரும் வீரர்களுக்கான ஆசியக் கோப்பை 2024 (எமர்ஜிங் ஆசிய கோப்பை) கிரிக்கெட் தொடர் வரும் அக்டோபர் 18-ம் தேதி துவங்குகிறது. கடந்த முறை இலங்கையில் நடைபெற்ற அந்தத் தொடர் இம்முறை ஓமன் நாட்டில் நடைபெற உள்ளது. அந்தத் தொடரில் இந்தியா ஏ அணி குரூப் - பி பிரிவில் இடம் பிடித்துள்ளது. அந்தப் பிரிவில் பாகிஸ்தான், ஓமன் மற்றும் ஐக்கிய அரபு நாடுகளும் இடம் பிடித்துள்ளது. குரூப் ஏ பிரிவில் இலங்கை, ஆப்கானிஸ்தான், வங்காளதேசம், நேபாளம் அணிகளும் இடம் பிடித்துள்ளன. இந்த தொடரில் முதலாவதாக நடைபெறும் லீக் சுற்றில் ஒவ்வொரு அணியும் மற்றொரு அணியுடன் ஒருமுறை மோதும். அதன் முடிவில் புள்ளிப்பட்டியலில் டாப் 2 இடங்களை பிடிக்கும் 4 அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெறும்.

இந்நிலையில், இந்த தொடருக்கான இந்தியா ஏ அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அணிக்கு திலக் வர்மா கேப்டனாகவும், அபிஷேக் சர்மா துணை கேப்டனாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும் இந்த அணியில் சாய் கிஷோர், ஆயுஷ் பதோனி, ராகுல் சஹார் உள்ளிட்ட முன்னணி வீரர்கள் இடம் பெற்றுள்ளனர். இந்தியா ஏ அணி விவரம்; திலக் வர்மா (கேப்டன்), அபிஷேக் சர்மா (துணை கேப்டன்), ப்ரப்சிம்ரன் சிங் (விக்கெட் கீப்பர்), நிஷாந்த் சிந்து, ராமன் தீப் சிங், நேஹால் வதேரா, ஆயுஷ் பதோனி, அனுஜ் ராவத் (விக்கெட் கீப்பர்), சாய் கிஷோர், ஹ்ரிதிக் ஷோகீன், ராகுல் சஹார், வைபவ் அரோரா, அன்ஷுல் கம்போஜ், அகிப் கான், ரசிக் சலாம்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 6 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 8 months 3 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 8 months 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து