முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தலா ரூ.60,000 மதிப்பில் சீர்வரிசை; 379 ஜோடிகளுக்கு திருமணம் நடத்திவைத்தது தமிழக அரசு: சென்னையில் 31 ஜோடிகளுக்கு திருமணத்தை நடத்தி வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்

திங்கட்கிழமை, 21 அக்டோபர் 2024      தமிழகம்
CM-1 2024-10-21

சென்னை,  தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று (அக்.21) சென்னை, திருவான்மியூர், மருந்தீஸ்வரர் கோயில் திருமண மண்டபத்தில், இந்து சமய அறநிலையத் துறை திருக்கோயில்கள் சார்பில் 31 ஜோடிகளுக்கு திருமணத்தை நடத்தி வைத்து, சீர்வரிசைப் பொருட்களை வழங்கி வாழ்த்தினார்.

இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பு: இந்து சமய அறநிலையத்துறையானது தன் ஆளுகைக்குட்பட்ட கோயில்களில் திருப்பணிகள் மேற்கொண்டு குடமுழுக்கு நடத்துதல், திருத்தேர் மற்றும் குளங்களை சீரமைத்தல், பக்தர்களுக்கான அடிப்படை வசதிகளை மேம்படுத்தி வழங்குதல், கோயில் சொத்துக்களை ஆக்கிரமிப்பாளர்களிடமிருந்து மீட்டெடுத்து பாதுகாத்தல் போன்ற பணிகளை செம்மையாக மேற்கொண்டு வருகிறது.

மேலும், கோயில்கள் சார்பில் கல்வி மற்றும் தொண்டு நிறுவனங்களை நிறுவி அறப்பணிகளை மேற்கொள்ளுதல், சித்தர்களுக்கும், அருளாளர்களுக்கும் விழா எடுத்து சிறப்பு செய்தல், பொருளாதாரத்தில் பின்தங்கிய ஜோடிகளுக்கும், மாற்றுத்திறனாளி ஜோடிகளுக்கும் சீர்வரிசைகளை வழங்கி திருமணம் செய்து வைத்தல், மகா சிவராத்திரி மற்றும் நவராத்திரி பெருவிழாவினை பக்தர்கள் பங்கேற்புடன் சிறப்புற நடத்துதல் போன்ற பணிகளை சீரிய முறையில் மேற்கொண்டு வருகிறது.

2022-2023 ஆம் ஆண்டுக்கான இந்து சமய அறநிலையத்துறையின் மானியக் கோரிக்கை அறிவிப்பின்படி, கோயில்கள் சார்பில் 500 ஜோடிகளுக்கு திருமணத்தை நடத்தி வைத்திடும் வகையில் கடந்த 4.12.2022 அன்று தமிழக முதல்வர் 25 ஜோடிகளுக்கு தலைமையேற்று திருமணத்தை நடத்தி வைத்து சீர்வரிசைப் பொருட்களை வழங்கினார். அதனைத் தொடர்ந்து மாநிலம் முழுவதும் மொத்தம் 500 ஜோடிகளுக்கு திருமணங்கள் நடத்தி வைக்கப்பட்டன.

அதனைத் தொடர்ந்து, 2023-2024 ஆம் ஆண்டுக்கான இந்து சமய அறநிலையத்துறையின் மானியக் கோரிக்கை அறிவிப்பின்படி, “பொருளாதாரத்தில் பின்தங்கிய ஜோடிகளுக்கு திருக்கோயில்கள் சார்பாக 4 கிராம் பொன் தாலி உட்பட ரூ.50,000 மதிப்பிலான சீர்வரிசைப் பொருட்களுடன் 600 ஜோடிகளுக்கு திருமண விழா நடத்தி வைக்கப்படும்” என அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து, முதற்கட்டமாக தமிழக முதல்வர் 7.07.2023 அன்று 34 ஜோடிகளுக்கு திருமணத்தை தலைமையேற்று நடத்தி வைத்து, சீர்வரிசைப் பொருட்களை வழங்கினார்.

இந்த அரசு பொறுப்பேற்றபின், 2022–2023 ஆம் நிதியாண்டில் 500 ஜோடிகளுக்கும், 2023 – 2024 ஆம் நிதியாண்டில் 600 ஜோடிகளுக்கும், என மொத்தம் 1,100 ஜோடிகளுக்கு திருக்கோயில்கள் சார்பில் திருமணங்கள் நடத்தி வைக்கப்பட்டுள்ளன.

2024-2025 ஆம் நிதியாண்டுக்கான இந்து சமய அறநிலையத்துறை மானியக் கோரிக்கையில் “பொருளாதாரத்தில் பின்தங்கிய 700 ஜோடிகளுக்கு திருக்கோயில்கள் சார்பாக 4 கிராம் தங்கத் தாலி உட்பட ரூ.60,000 மதிப்பில் சீர்வரிசைகள் வழங்கி திருமணம் நடத்தி வைக்கப்படும்“ என அறிவிக்கப்பட்டது. இந்த அறிவிப்பினை நிறைவேற்றிடும் வகையில், முதற்கட்டமாக சென்னை மாவட்ட திருக்கோயில்கள் சார்பில் 31 ஜோடிகளுக்கு முதல்வர் ஸ்டாலின் நேற்றையதினம் (அக்.21) திருமணத்தை நடத்தி வைத்து, பரிசுகள் மற்றும் சீர்வரிசைப் பொருட்களை வழங்கி, மணமக்களை வாழ்த்தினார்.

சென்னை உட்பட மாநிலம் முழுவதும் நேற்று மட்டும் மொத்தம் 379 ஜோடிகளுக்கு திருமணங்கள் நடத்தி வைக்கப்பட்டன. ஜோடிகளுக்கு மாங்கல்யத்துடன் சீர்வரிசைப் பொருட்களாக கட்டில், பீரோ, மெத்தை, தலையணைகள், சமையல் எரிவாயு அடுப்பு, வெட் கிரைண்டர், மிக்சி, குக்கர், சமையல் பாத்திரங்கள் உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்பட்டன, என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 4 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 6 months 3 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 6 months 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து