முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சித்தா, ஆயுர்வேதா, யுனானி படிப்புகளில் இடஒதுக்கீட்டில் அரசுப்பள்ளி மாணவர்கள் 97 பேருக்கு இடம் : பொதுப்பிரிவு கலந்தாய்வு இன்று தொடக்கம்

திங்கட்கிழமை, 21 அக்டோபர் 2024      தமிழகம்
Siddha 2024-10-13

Source: provided

சென்னை : சித்தா, ஆயுர்வேதா, யுனானி, ஓமியோபதி படிப்புகளுக்கான கலந்தாய்வு சென்னையில் நேற்று (அக்.21) தொடங்கியது. இதில், சிறப்புப் பிரிவில் 11 இடங்களும், 7.5 சதவீத உள்ஒதுக்கீட்டின் கீழ் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு ஒதுக்கப்பட்ட 97 இடங்களும் நிரம்பின. பொதுப் பிரிவு கலந்தாய்வு இன்று தொடங்கி 29-ம் தேதி வரை நடைபெறவுள்ளது.

தமிழகத்தின் இந்திய மருத்துவம் - ஓமியோபதி துறையின் கீழ் சென்னை அரும்பாக்கம் அறிஞர் அண்ணா அரசு இந்திய மருத்துவமனை வளாகத்தில் சித்த மருத்துவக் கல்லூரி, யுனானி மருத்துவக் கல்லூரி, திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டையில் சித்த மருத்துவக் கல்லூரி, மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் ஓமியோபதி மருத்துவக் கல்லூரி, கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அடுத்த கோட்டாறில் ஆயுர்வேத மருத்துவக் கல்லூரி ஆகியவை உள்ளன.

இந்த 5 அரசுக் கல்லூரிகளில் உள்ள 330 இடங்களில், அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு 50 இடங்கள் வழங்கப்படுகிறது. எஞ்சியுள்ள 280 இடங்கள் மாநில அரசுக்கு உள்ளன. இதேபோல, 30 தனியார் கல்லூரிகளில் உள்ள 1,980 இடங்களில் 15 சதவீதம் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு வழங்கப்படுகிறது. மீதமுள்ள இடங்களில் மாநில அரசுக்கு 65 சதவீதம், நிர்வாக ஒதுக்கீட்டுக்கு 35 சதவீதம் உள்ளன. அரசு ஒதுக்கீட்டு இடங்கள், தனியார் கல்லூரிகளின் நிர்வாக ஒதுக்கீட்டு இடங்கள் மற்றும் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களுக்கு மாநில அரசு கலந்தாய்வு நடத்தி வருகிறது. அரசு கல்லூரிகளின் 15 சதவீத இடங்களுக்கு மட்டும் மத்திய அரசு கலந்தாய்வு நடத்துகிறது.

சித்தா (பிஎஸ்எம்எஸ்), ஆயுர்வேதா (பிஏஎம்எஸ்), யுனானி (பியுஎம்எஸ்), ஓமியோபதி (பிஎச்எம்எஸ்) ஆகிய பட்டப்படிப்புகளுக்கு 2024-25-ம் கல்வி ஆண்டு மாணவர் சேர்க்கை கலந்தாய்வுக்கு நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவ - மாணவியர் விண்ணப்பித்தனர். விண்ணப்பங்கள் பரிசீலனை செய்யப்பட்டு, தகுதியான மாணவர்களுக்கான தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டது.

இந்நிலையில், சென்னை அரும்பாக்கம் சித்தா மருத்துவமனை வளாகத்தில் கலந்தாய்வு நேற்று (அக்.21) காலை தொடங்கியது. முதல் நாளான நேற்று மாற்றுத்திறனாளிகள், முன்னாள் ராணுவத்தினர் வாரிசுகள், விளையாட்டு வீரர்கள் ஆகிய சிறப்புப் பிரிவினருக்கும் 7.5 சதவீத உள்ஒதுக்கீட்டின் கீழ் அரசுப் பள்ளி மாணவர்களுக்கும் கலந்தாய்வு நடைபெற்றது. இதில், 7.5 சதவீத உள்ஒதுக்கீட்டின் கீழ் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு ஒதுக்கப்பட்ட 97 இடங்களும் நிரப்பப்பட்டன.

அதேபோல், முன்னாள் ராணுவத்தினர் வாரிசுகள் மற்றும் விளையாட்டு வீரர்கள் பிரிவுக்கு ஒதுக்கப்பட்ட தலா 5 இடங்களும் நிரம்பின. மாற்றுத்திறனாளிகளுக்கு ஒதுக்கப்பட்டிருந்த 17 இடங்களில் ஒரு இடம் மட்டும் நிரப்பப்பட்டதால், மீதமுள்ள 16 இடங்கள் பொதுப் பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளன. பொதுப் பிரிவினருக்கான கலந்தாய்வு 22-ம் தேதி (இன்று) முதல் 29-ம் தேதி வரை நடைபெறவுள்ளது. மேலும் விவரங்களுக்கு www.tnhealth.tn.gov.in என்ற சுகாதாரதுறை இணையதளத்தை பார்த்து தெரிந்து கொள்ளலாம்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 4 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 6 months 3 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 6 months 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து