முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நியூசி.க்கு எதிரான தோல்வி: கேப்டன் ரோகித் சர்மா விளக்கம்

ஞாயிற்றுக்கிழமை, 20 அக்டோபர் 2024      விளையாட்டு
Indian-team 2024-02-06

Source: provided

பெங்களூரு : நியூசிலாந்துக்கு எதிரான தோல்விக்கு குறித்து இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா விளக்கமளித்துள்ளார்.

அபார வெற்றி...

இந்தியாவுக்கு வந்துள்ள நியூசிலாந்து கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்டடெஸ்ட்,  தொடரில் ஆடி வருகிறது. இதன்படி இந்தியா- நியூசிலாந்து இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி பெங்களூருவில் உள்ள சின்னசாமி ஸ்டேடியத்தில் நடந்தது. 5வது நாள் ஆட்டம் நேற்று நடைபெற்றது. மழை காரணமாக ஆட்டம் தாமதமாக தொடங்கியது. தொடக்கத்தில் டாம் லாதம் ரன் எதுவும் எடுக்காமல் பும்ரா பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். பின்னர் டெவான் கான்வே 17 ரன்களில் வெளியேறினார். தொடர்ந்து வில் ய்ங் , ரச்சின் ரவீந்திரா இருவரும் இணைந்து சிறப்பாக விளையாடினர் . இதனால் நியூசிலாந்து அணி 27.3 ஓவர்களில் 2 விக்கெட் இழப்பிற்க்கு 107 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது .

சரியாக பேட்டிங்... 

இந்த வெற்றியால் 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 1-0 என நியூசிலாந்து அணி முன்னிலை பெற்றுள்ளது. 2வது டெஸ்ட் வரும் 26ம் தேதி தொடங்க உள்ளது. இந்த நிலையில் தோல்வி குறித்து பேசிய இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா கூறியதாவது, முதல் இன்னிங்சில் நாங்கள் சரியாக பேட்டிங் செய்யவில்லை. நாங்கள் 46 ரன்களுக்கு ஆல் அவுட் ஆவோம் என்று எதிர்பார்க்கவில்லை. இருப்பினும் இரண்டாவது இன்னிங்ஸில் பேட்டிங்கில் சிறப்பாக செயல்பட்டோம் இது ஒரு நல்ல முயற்சி. 350 ரன்கள் பின்தங்கியிருக்கும் போது,அதிகம் யோசிக்க முடியாது. ரிஷப் பண்ட் மற்றும் சர்பராஸ் கான் ஆகியோரின் பேட்டிங்கை பார்க்க மிகவும் உற்சாகமாக இருந்தது. நியூசிலாந்து அணி நன்றாகப் பந்துவீசியது, அதற்கு நாங்கள் பதிலளிக்கத் தவறிவிட்டோம். நாங்கள் மீண்டு வருவோம் என தெரிவித்தார்.

அடுத்த போட்டியில் ரிஷப் பண்ட்...

முதல் டெஸ்ட் போட்டியில் காயமடைந்துள்ள ரிஷப் பண்ட் அடுத்த போட்டியில் விளையாடுவாரா..? என்பது குறித்து இந்திய கேப்டன் ரோகித் சர்மா பதில் அளித்துள்ளார்.உண்மையில் முழங்காலில் பெரிய அறுவை சிகிச்சை செய்து கொண்ட அவர் கடின காலத்தை கடந்து வந்தார். கீப்பிங் செய்யும் போது ஒவ்வொரு பந்துக்கும் நீங்கள் உட்கார்ந்து எழுந்திருக்க வேண்டும். அதனாலேயே அவரை கீப்பிங் செய்ய அனுப்பாமல் அடுத்த போட்டிக்கு தயாராக உதவலாம் என்று நாங்கள் முடிவெடுத்தோம். அவர் தனது போக்கிலான மனநிலையில் வெற்றிகரமான செயல்பாடுகளை வெளிப்படுத்தியுள்ளார். எனவே அவர் சுதந்திரமாக விளையாடுவதற்கு நாங்கள் ஆதரவு கொடுக்க வேண்டும் என்றார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 4 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 6 months 3 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 6 months 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து