முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வரும் ஐ.பி.எல் தொடரில் டோனி விளையாடுவார் : சி.எஸ்.கே. சி.இ.ஓ. நம்பிக்கை

ஞாயிற்றுக்கிழமை, 20 அக்டோபர் 2024      விளையாட்டு
Dhoni 2024-05-13

Source: provided

சென்னை : ஐ.பி.எல். தொடரில் டோனி விளையாட வேண்டும் என எங்களுக்கும் ஆசைதான் என்று தெரிவித்த சி.எஸ்.கே அணியின் சி.இ.ஓ. காசி விஸ்வநாதன், அவர் ஆடுவார் என்ற நம்பிக்கை உள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

வரும் மார்ச் மாதம்...

10 அணிகள் பங்கேற்கும் 18-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி அடுத்த ஆண்டு (2025) மார்ச், ஏப்ரல், மே மாதங்களில் நடக்கிறது. இந்த போட்டிக்கான வீரர்களின் மெகா ஏலம் நவம்பர் கடைசி வாரத்தில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. ஏலத்துக்கு முன்பாக ஒவ்வொரு அணியும் 6 வீரர்கள் வரை தக்க வைத்து கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மேலும் அணியில் தக்கவைத்துக்கொள்ளும் வீரர்கள் விபரங்களை அறிவிக்க வரும் 31ம் தேதி கடைசி நாளாகும். இதனால் ஒவ்வொரு அணியும் எந்தெந்த வீரர்களை தக்கவைத்துக்கொள்ளும் என்ற பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. அதேபோல் சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) அணியில் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் டோனி தக்க வைக்கப்படுவாரா? என்ற பெரிய கேள்வி எழுந்துள்ளது.

ஐ.பி.எல்.லில் மட்டும்... 

டோனி தற்போது அனைத்து வகையான சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்று ஐ.பி.எல்.லில் மட்டுமே விளையாடி வருகிறார். அவருக்கு தற்போது 43 வயது ஆகிறது. இதனால் வரும் சீசனில் டோனி சி.எஸ்.கே. அணிக்காக விளையாடுவாரா? அவரை சி.எஸ்.கே. அணி தக்க வைக்குமா? ஒருவேளை டோனி விளையாடாவிட்டால் அவருக்கு சி.எஸ்.கே. அணியின் ஆலோசகர் பொறுப்பு வழங்கப்படுமா? என்ற பல கேள்விகள் எழுந்துள்ளன

சொல்லவில்லை.... 

இந்நிலையில் திருவாரூர் மாவட்ட கிரிக்கெட் சங்கம் சார்பில் நடந்த நிகழ்ச்சியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் சி.இ.ஓ. காசி விஸ்வநாதன் பங்கேற்றார். இதனையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், "ஐ.பி.எல்.லில் சி.எஸ்.கே. என்றாலே டோனி தான். இது உங்களுக்கும் தெரியும். எங்களுக்கும் டோனி விளையாட வேண்டும் என்ற ஆசை உள்ளது. ஆடுவேனா, ஆடமாட்டேனா என்று இன்னும் அவர் எங்களுக்கு சொல்லவில்லை. அணியில் தக்க வைக்க வேண்டிய வீரர்களின் விபரத்தை அளிக்க அக்டோபர் 31ம் தேதி தான் கடைசி நாள். அதற்குள் எங்களிடம் சொல்வதாக கூறியுள்ளார். அவர் சொன்னதற்கு பிறகு அதுபற்றி உங்களிடம் நான் கூறுகிறேன். எங்களை பொறுத்தவரை டோனி விளையாட வேண்டும் என்ற ஆசை உள்ளது. அவர் ஆடுவார் என்ற நம்பிக்கை உள்ளது" என்று அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 4 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 6 months 3 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 6 months 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து