முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஒரு பவுன் ரூ.58,400-க்கு விற்பனை: தொடர்ந்து புதிய உச்சம் தொடும் தங்கம் விலை

திங்கட்கிழமை, 21 அக்டோபர் 2024      தமிழகம்
Gold 2024-04-06

Source: provided

சென்னை : ஒரு பவுன் ரூ.58,400-க்கு விற்பனையாகி தொடர்ந்து புதிய உச்சம் தொட்டுள்ளது தங்கம் விலை.

தங்கம் விலை மார்ச் மாதம் சவரனுக்கு ரூ.50 ஆயிரத்தை கடந்த நிலையில், 2 மாத இடைவெளியில், அதாவது மே மாதத்தில் ரூ.55 ஆயிரம் என்ற நிலையையும் கடந்து புதிய உச்சத்தை தொட்டது. தொடர்ந்து விலை அதிகரித்து வந்த நிலையில், கடந்த ஜூலை மாதம் 23-ந் தேதி மத்திய பட்ஜெட்டில் தங்கத்தின் மீதான இறக்குமதி வரி குறைக்கப்பட்டதால், அதன் விலை அதிரடியாக சரிந்தது. அன்றைய நாளில் மட்டும் பவுனுக்கு ரூ.2,200 குறைந்திருந்தது. 

அதன் தொடர்ச்சியாகவும் விலை சரியத் தொடங்கி கடந்த ஆகஸ்டு மாதம் ரூ.50 ஆயிரத்து 640-க்கு வந்தது. ஒரு கட்டத்தில் ரூ.50 ஆயிரத்துக்கு கீழ் செல்லும் என்றெல்லாம் பேசப்பட்டது. ஆனால் அந்த நிலை அப்படியே மாறியது. எந்த அளவுக்கு குறைந்து வந்ததோ, அதே வேகத்தில் மீண்டும் உயர ஆரம்பித்தது. ஒரே வாரத்தில் பவுனுக்கு ரூ.2 ஆயிரம் வரை அதிகரித்தது. அதன் பின்னரும் விலை உயர்ந்து, கடந்த மாதம் (செப்டம்பர்) ரூ.55 ஆயிரத்தையும் தாண்டியது. மேலும் விலை ஏறுமுகத்தில் காணப்பட்டு, ரூ.56 ஆயிரம் என்ற நிலையையும் கடந்தது. இந்த மாதம் தொடக்கத்தில் இருந்து ரூ.56 ஆயிரம் முதல் ரூ.57 ஆயிரம் வரையில் ஏற்ற, இறக்கத்துடன் இருந்து வந்தது.

இந்த ஏற்ற, இறக்கத்துக்கு கடந்த 16-ந் தேதி ஒரு முற்றுப்புள்ளி வைத்தது போல, ஒரு சவரன் ரூ.57 ஆயிரத்தை கடந்தது. ரூ.57 ஆயிரத்தை கடந்த 3-வது நாளில் ரூ.58 ஆயிரத்தையும் தங்கம் விலை தாண்டி அதிர்ச்சியை கொடுத்துவிட்டது. சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கம் விலை நேற்று முன்தினம் சவரன் ரூ.58 ஆயிரத்துக்கு 240-க்கு விற்பனையானது. இந்நிலையில் நேற்று சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.160 உயர்ந்து ரூ.58 ஆயிரத்து 400-க்கு விற்பனையானது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.20 உயர்ந்து ரூ.7,300-க்கு விற்பனையானது. வெள்ளி விலையில் நேற்று மாற்றம் இல்லை. வெள்ளி விலை ஒரு கிராம் ரூ.107-க்கு விற்பனையானது.

கடைசி 5 நாட்கள் தங்கம் விலை நிலவரம் வருமாறு.,- 20-10-2024- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 58,240, 19-10-2024- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 58,240, 18-10-2024- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 57,920, 17-10-2024- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 57,280, 16-10-2024- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 57,200-க்கும் விற்பனையானது. கடைசி 5 நாட்கள் வெள்ளி விலை நிலவரம் வருமாறு., 20-10-2024- ஒரு கிராம் ரூ. 107, 19-10-2024- ஒரு கிராம் ரூ. 107, 18-10-2024- ஒரு கிராம் ரூ. 105, 17-10-2024- ஒரு பவுன் ரூ. 103, 16-10-2024- ஒரு கிராம் ரூ. 103-க்கும் விற்பனையானது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 4 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 6 months 3 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 6 months 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து