முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அவதூறு வழக்கில் அரவிந்த் கெஜ்ரிவால் மனுவை தள்ளுபடி செய்த சுப்ரீம் கோர்ட்

திங்கட்கிழமை, 21 அக்டோபர் 2024      இந்தியா
Supreme-Court 2023-04-06

Source: provided

புதுடெல்லி : அவதூறு வழக்கில் சம்மனை எதிர்த்து கெஜ்ரிவால் தாக்கல் செய்த மேல் முறையீட்டு மனுவை சுப்ரீம் கோர்ட் தள்ளுபடி செய்தது.

பிரதமர் மோடியின் கல்வி தகுதி குறித்து ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளரும் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் விமர்சித்து பேசியிருந்தார். இதுதொடர்பாக குஜராத் பல்கலைக்கழகம் கெஜ்ரிவாலுக்கு எதிராக அவதூறு வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கு விசாரணைக்காக கெஜ்ரிவால் மற்றும் ஆம் ஆத்மி கட்சி நிர்வாகி சஞ்சய் சிங் ஆகியோர் நேரில் ஆஜராக விசாரணை நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த சம்மனை எதிர்த்து கெஜ்ரிவால் தரப்பு குஜராத் ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தது.

இந்த வழக்கை விசாரித்த குஜராத் ஐகோர்ட், கெஜ்ரிவால் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்தது. இதையடுத்து, குஜராத் ஐகோர்ட் உத்தரவுக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் கெஜ்ரிவால் மேல் முறையீடு செய்தார். இந்த மனுவை விசாரித்த சுப்ரீம் கோர்ட், குஜாரத் ஐகோர்ட் தீர்ப்பை உறுதி செய்ததோடு, கெஜ்ரிவாலின் மேல் முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்தது.

இதேவழக்கில் சஞ்சய் சிங் தனியாக தாக்கல் செய்த மனுவை வேறு சுப்ரீம் கோர்ட் தள்ளுபடி செய்துள்ளது. எனவே, ஒரே மாதிரியான அணுகுமுறையை நாங்கள் கடைபிடிக்க வேண்டும் எனக் கூறிய சுப்ரீம் கோர்ட், கெஜ்ரிவால் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 4 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 6 months 3 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 6 months 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து