முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மீண்டும் சர்ச்சையில் சிக்கிய பிரபல யூடியூபர் இர்பான்

திங்கட்கிழமை, 21 அக்டோபர் 2024      தமிழகம்
YouTuber-Irfan 2024-10-21

Source: provided

சென்னை : தனது மனைவியின் பிரசவத்தின் போது, பிறந்த குழந்தையின் தொப்புள் கொடியை வெட்டி வீடியோ வெளியிட்டு பிரபல யூடியூபர் இர்பான் மீண்டும் சர்ச்சையில் சிக்கியுள்ளார்.

தமிழகத்தில் உள்ள பிரபல யூடியூபர்களில் ஒருவர் இர்பான். இவர் உணவகங்களில் ரிவியூ வீடியோ போட்டு பிரபலம் ஆனவர். வெவ்வெறு அரசியல் கட்சி பிரபலங்களுடனும் தொடர்பில் இருப்பவர். இவர், தனது மனைவியின் வயிற்றில் இருந்த கருவின் பாலினம் குறித்து வெளிநாட்டில் பரிசோதித்து அறிவித்த வீடியோ, சில மாதம் முன் சர்ச்சையை ஏற்படுத்தியது. குழந்தையின் பாலினத்தை வெளியிடுவது இந்தியாவில் சட்டப்படி குற்றமாகக் கருதப்படும் சூழலில், அதனை மீறி இர்பான் தனது பாலினத்தை வெளியிட்டார். 

இது சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், சுகாதாரத்துறையின் முன் ஆஜராகி விளக்கம் அளித்தார். அப்போது, யூடியூபில் இருந்து சர்ச்சைக்குரிய வீடியோவை நீக்குவதுடன், மன்னிப்பு கேட்டு வீடியோ வெளியிட வேண்டும் என்றும் அரசுத் தரப்பில் அறிவுரை வழங்கப்பட்டிருந்தது.அப்போதைக்கு தலையை ஆட்டி விட்டு வந்த இர்பான், மன்னிப்பு கோரும் வீடியோ எதுவும் வெளியிடவில்லை. பாலினம் அறிவித்த வீடியோவை மட்டும் நீக்கி விட்டு அமைதியாகி விட்டார். அரசு தரப்பிலும் அதை கண்டுகொள்ளவில்லை.

இந்த விவகாரம் நடந்த சில மாதங்களுக்குள்ளாகவே யூடியூபர் இர்பான் மீண்டும் சர்ச்சையில் சிக்கியுள்ளார். இர்பானின் மனைவிக்கு கடந்த ஜூலை மாதம் குழந்தை பிறந்துள்ளது. பிரசவத்தின் போது, ஆபரேசன் தியேட்டரின் உள்ளே இருந்த இர்பான், குழந்தையின் தொப்புள் கொடியை கத்திரிக்கோலால் துண்டித்தார். இதனை வீடியோவாக எடுத்த அவர், தனது யூடியூப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

இந்த வீடியோ வைரலான நிலையில், அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று என தமிழக ஊரக நலப்பணிகள் இயக்குநர் ராஜமூர்த்தி தெரிவித்துள்ளார். இதனிடையே, சம்பந்தப்பட்ட சர்ச்சைக்குரிய வீடியோ நீக்குமாறு யூடியூப் நிறுவனத்திற்கு தமிழக சுகாதாரத்துறை கடிதம் எழுதியுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 4 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 6 months 3 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 6 months 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து