முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கணிப்பது கடினம்: சாம்சன்

திங்கட்கிழமை, 21 அக்டோபர் 2024      விளையாட்டு
Sanju-Samson

Source: provided

சஞ்சு சாம்சன், ஒரு யூ டியூப் சேனல் ஒன்றிக்கு பேட்டி அளித்தார். அப்போது அவரிடம் டோனி, விராட் குறித்து சில கேள்விகள் கேட்கப்பட்டது. அந்த கேள்விகளுக்கு சாம்சன் பதில் அளித்து கூறியதாவது, நாங்கள் ஐ.பி.எல் தொடரில் சி.எஸ்.கே அணிக்கு எதிராக விளையாடுவதற்கு திட்டம் தீட்டும் பொழுது மகேந்திர சிங் டோனியின் பெயர் வந்தால், அவரை அப்படியே விட்டு விடுங்கள் அடுத்த வீரர் பற்றி பேசலாம் என்று நகர்ந்து விடுவோம். காரணம் என்னவென்றால் டோனிக்கு எதிராக திட்டங்கள் தீட்டுவது மிகவும் கடினமானது. இதேபோல் தற்போது கிரிக்கெட் உலகில் மிகச்சிறந்த கவர் டிரைவ் வைத்திருக்கக்கூடிய வீரர் என்றால் அது விராட் கோலிதான்.இவ்வாறு அவர் கூறினார்.

________________________________________________________________________________

இந்தியா தொடர்ந்து முதலிடம்

நியூஸிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் தோல்வி அடைந்தபோதிலும், இந்திய அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தரவரிசையில் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. நியூஸிலாந்துக்கு எதிராக பெங்களூருவில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் இந்தியா தோல்விகண்டது. இதையடுத்து இந்திய அணியின் வெற்றி சதவீதம் 68.06 ஆக குறைந்துள்ளது. அதே வேளையில், நியூஸிலாந்து அணி 6-வது இடத்திலிருந்து 4-வது இடத்துக்கு முன்னேறியுள்ளது.

62.50 சதவீத வெற்றியுடன் ஆஸ்திரேலிய அணி 2-வது இடத்திலும், 55.56 சதவீத வெற்றிகளுடன் இலங்கை அணி 3-வது இடத்திலும் உள்ளது. இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா, வங்கதேசம், பாகிஸ்தான், மேற்கு இந்தியத் தீவுகள் ஆகியவை முறையே 5, 6, 7, 8, 9-வது இடங்களில் உள்ளன.

________________________________________________________________________________

புஜாரா இரட்டை சதம் விளாசல்

நடப்பு ரஞ்சி கோப்பை கிரிக்கெட் சீசனில் இரட்டை சதம் விளாசியுள்ளார் இந்திய வீரர் புஜாரா. இது முதல் தர கிரிக்கெட்டில் அவரது 18-வது இரட்டை சதமாக அமைந்துள்ளது. 36 வயதான புஜாரா, சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடும் வாய்ப்பினை பெறாத சூழலிலும் தொடர்ந்து உள்ளூர் கிரிக்கெட்டில் விளையாடி வருகிறார். ரஞ்சி கோப்பை 2024-25 கிரிக்கெட் சீசனில் சவுராஷ்டிரா அணிக்காக அவர் விளையாடி வருகிறார். சத்தீஸ்கர் அணிக்கு எதிரான போட்டியில் 383 பந்துகளை எதிர்கொண்டு 234 ரன்களை அவர் எடுத்தார். 

இதன் மூலம் முதல் தர கிரிக்கெட்டில் சில சாதனைகளை படைத்துள்ளார். இது முதல் தர கிரிக்கெட்டில் புஜாராவின் 18-வது சதமாகும். இதன் மூலம் முதல் தர கிரிக்கெட்டில் (ஆல்-டைம்) அதிக இரட்டை சதம் பதிவு செய்த வீரர்கள் பட்டியலில் நான்காவது இடத்துக்கு புஜாரா முன்னேறியுள்ளார். இந்திய அளவில் இந்த பார்மெட்டில் அதிக சதம் மற்றும் 21,000+ ரன்கள் விளாசிய வீரர்கள் பட்டியலில் சச்சின், கவாஸ்கர், திராவிட் ஆகியோருக்கு அடுத்த இடத்தில் புஜாரா (66 சதங்கள்) உள்ளார். இதன் மூலம் சதங்களில் மேற்கு இந்தியத் தீவுகளின் முன்னாள் வீரர் பிரையன் லாராவை (65) முந்தியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 4 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 6 months 3 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 6 months 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து