முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வயநாடு மக்களவை தொகுதி இடைத்தேர்தல்: நாளை வேட்பு மனு தாக்கல் செய்கிறார் பிரியங்கா காந்தி

திங்கட்கிழமை, 21 அக்டோபர் 2024      இந்தியா
Priyanka-Gandhi 2023-06-08

Source: provided

வயநாடு : வயநாடு மக்களவை தொகுதிக்கு வரும் நவம்பர் 13 ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் பிரியங்கா காந்தி நாளை வேட்பு மனு தாக்கல் செய்கிறார்.

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான ராகுல் காந்தி லோக்சபா தேர்தலில் இரண்டு தொகுதிகளில் போட்டியிட்டார். ரேபரேலி மற்றும் வயநாடு ஆகிய இரண்டு தொகுதிகளில் ராகுல் காந்தி போட்டியிட்ட நிலையில் இரண்டிலுமே வெற்றி பெற்றார். இதனால், வயநாடு தொகுதி எம்பி பதவியை ராகுல் காந்தி ராஜினாமா செய்தார்.

இதையடுத்து, அந்த தொகுதி காலியாக இருந்தது. இந்த நிலையில், வயநாடு தொகுதிக்கு வரும் நவம்பர் 13 ஆம் தேதி தேர்தல் நடத்தப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதில் காங்கிரஸ் கட்சி சார்பில் பிரியங்கா காந்தி போட்டியிடுவார் என்று அக்கட்சி தேர்தலுக்கு முன்பே அறிவித்துவிட்டது.பாஜக சார்பில் நவ்யா ஹரிதாஸ் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார். இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் சத்யன் மொகேரியும் போட்டியிடுகிறார்

3 பிரதான கட்சிகளுமே வேட்பாளரை அறிவித்துவிட்டதால், அந்த கட்சிகளின் தொண்டர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர். இதனிடையே, நாளை ( புதன்கிழமை) பிரியங்கா காந்தி வேட்பு மனு தாக்கல் செய்ய உள்ளார். ராகுல் காந்தி மற்றும் சோனியா காந்தியும் பிரியங்காவுடன் வயநாடு வருகை தர உள்ளனர். இதனால் பிரியங்கா காந்திக்கு ஆதரவாக இருவரும் பிரசாரம் செய்யலாம் எனத்தெரிகிறது. எனினும், எத்தனை நாட்கள் பிரசாரம் செய்வார்கள் என்ற விவரம் தெரியவில்லை.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 4 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 6 months 3 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 6 months 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து