முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்தியாவுக்கு எதிரான 2-வது டெஸ்ட்: 301 ரன்கள் முன்னிலையுடன் வலுவான நிலையில் நியூசிலாந்து அணி

வெள்ளிக்கிழமை, 25 அக்டோபர் 2024      விளையாட்டு
New-Zealand-team 2023-12-17

Source: provided

புனே : இந்தியா - நியூசிலாந்து 2-வது டெஸ்ட் போட்டியின் 2-வது நாள் ஆட்டம் இன்று முடிவடைந்த நிலையில் 2-வது இன்னிங்சில் இந்திய அணியை விட 301 ரன்கள் முன்னிலை பெற்று நியூசிலாந்து அணி வலுவான நிலையில் உள்ளது.

மிட்செல் சான்ட்னெர்... 

இந்தியா - நியூசிலாந்து இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி மராட்டிய மாநிலம் புனேயில் நேற்று முன்தினம் தொடங்கியது. இந்திய அணியில் 3 மாற்றமாக லோகேஷ் ராகுல், குல்தீப் யாதவ், முகமது சிராஜ் நீக்கப்பட்டு அவர்களுக்கு பதிலாக சுப்மன் கில், வாஷிங்டன் சுந்தர், ஆகாஷ் தீப் சேர்க்கப்பட்டனர். நியூசிலாந்து அணியில் மேட் ஹென்றிக்கு பதிலாக சுழற்பந்து வீச்சாளர் மிட்செல் சான்ட்னெர் இடம் பிடித்தார்.

நியூசி., முதலில் பேட்...

இந்த போட்டியில் 'டாஸ்' வென்ற நியூசிலாந்து கேப்டன் டாம் லதாம் முதலில் பேட் செய்வதாக அறிவித்தார். சுழலுக்கு சாதகமான இந்த மைதானத்தில் இரு அணிகளிலும் ஸ்பின்னர்கள் ஆதிக்கம் செலுத்தினர். நியூசிலாந்து அணி முதல் இன்னிங்சில் 259 ரன்களில் ஆல் அவுட் ஆனது. அதிகபட்சமாக கான்வே 76 ரன்களும்,ரச்சின் ரவீந்திரா 65 ரன்களும் அடித்தனர். இந்தியா தரப்பில் சுழற்பந்து வீச்சாளர்களான சுந்தர் 7 விக்கெட்டுகளும், அஸ்வின் 3 விக்கெட்டுகளும் கைப்பற்றி அசத்தினர்.

 7 விக்கெட்டுகள்.... 

இதனையடுத்து முதல் இன்னிங்சை தொடங்கிய இந்திய அணி மிட்செல் சான்ட்னரின் சுழற்பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் 156 ரன்களில் ஆல் அவுட் ஆனது. இந்தியா தரப்பில் அதிகபட்சமாக ஜடேஜா 38 ரன்கள் எடுத்தார். நியூசிலாந்து தரப்பில் அதிகபட்சமாக மிட்செல் சான்ட்னர் 7 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

லதாம் 86 ரன்களில்... 

பின்னர் 103 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை தொடங்கிய நியூசிலாந்து அணிக்கு தொடக்க ஆட்டக்காரர் ஆன கான்வே 17 ரன்களிலும், அவரை தொடர்ந்து வில் யங் 23 ரன்களிலும், ரவீந்திரா 9 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தாலும் மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் ஆன கேப்டன் டாம் லதாம் பொறுப்புடன் விளையாடி அணியை முன்னெடுத்து சென்றார். அவருக்கு சிறிது ஒத்துழைப்பு கொடுத்த டேரில் மிட்செல் 18 ரன்களில் ஆட்டமிழந்தார். பொறுப்புடன் விளையாடி அரைசதம் அடித்த லதாம் 86 ரன்களில் விக்கெட்டை பறிகொடுத்தார். இந்த இன்னிங்சிலும் வாஷிங்டன் சுந்தரே விக்கெட் வேட்டை நடத்தினார்.

நான்கு விக்கெட்டுகள்...

2-வது நாள் முடிவில் நியூசிலாந்து அணி 5 விக்கெட்டுகளை இழந்து 198 ரன்கள் அடித்துள்ளது. டாம் பிளண்டெல் 30 ரன்களுடனும், கிளென் பிலிப்ஸ் 9 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். இந்தியா தரப்பில் அதிகபட்சமாக சுந்தர் 4 விக்கெட்டுகளும், அஸ்வின் 1 விக்கெட்டும் வீழ்த்தியுள்ளனர். நியூசிலாந்து இதுவரை 301 ரன்கள் முன்னிலை பெற்று வலுவான நிலையில் உள்ளது. இன்று 3-வது நாள் ஆட்டம் நடைபெற உள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 9 hours ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 10 hours ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 5 months 11 hours ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 11 hours ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 7 months 10 hours ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 7 months 10 hours ago
View all comments

வாசகர் கருத்து