முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

குரூப் 4 தேர்வு முடிவுகள் எப்போது? - டி.என்.பி.எஸ்.சி. முக்கிய அறிவிப்பு

வெள்ளிக்கிழமை, 25 அக்டோபர் 2024      தமிழகம்
TNPSC 2022 12 20

Source: provided

சென்னை : வரும் 28-ம் தேதி தமிழ்நாடு அரசு பணியாளர்கள் தேர்வாணையம் சார்பில் நடைபெறவுள்ள ஆலோசனை  கூட்டத்தில் நிர்வாகிகள் கலந்தாலோசித்து குரூப் 4 தேர்வு முடிவுகள் வெளியாகும் தேதி குறித்து முடிவெடுக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அமைச்சு பணிகள், வாரியங்கள், வனப் பணி மற்றும் பொதுத் துறை நிறுவனங்களில் காலியாக உள்ள நான்காம் நிலை பணியிடங்களை நிரப்புவதற்கான குரூப் 4 தேர்வை ஜூன் 9-ம் தேதி நடத்தியது. மொத்தம் 8 ஆயிரத்து 932 பணியிடங்களுக்கு இந்தத் தேர்வு நடத்தப்பட்டது. 

இந்தத் தேர்வு மூலம் கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர், தட்டச்சர், வனக் காவலர் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.தமிழகம் முழுவதும் 7 ஆயிரத்து 247 தேர்வு மையங்களில் மொத்தம் 15.8 லட்சம் பேர் குரூப் 4 தேர்வை எழுதியுள்ளனர். 

இந்த சூழலில் ஜூன் 19-ம் தேதி குரூப் 4 தேர்வுக்கான தற்காலிக விடைக்குறிப்புகள் தேர்வாணையத்தின் இணையதளத்தில் வெளியிடப்பட்டது. இதனைத் தொடர்ந்து, குரூப் 4 தேர்வு முடிவுகள் வருகின்ற அக்டோபர் மாதத்தில் வெளியிடப்படும் என்று தேர்வாணையம் அறிவித்திருந்தது.

இந்நிலையில் குரூப் 4 தேர்வு முடிவுகள் வெளியாகும் தேதி குறித்து சில முக்கிய தகவல்கள் வெளியாகியுள்ளன. அதன்படி, வரும் 28-ம் தேதி தமிழ்நாடு அரசு பணியாளர்கள் தேர்வாணையம் சார்பில் ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது. அந்த கூட்டத்தில் நிர்வாகிகள் கலந்தாலோசித்து தேர்வு முடிவுகள் வெளியாகும் தேதி குறித்து முடிவெடுக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த கூட்டம் முடிவடைந்த சில தினங்களில் தேர்வு முடிவுகள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 3 hours ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 4 hours ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 5 months 5 hours ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 5 hours ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 7 months 4 hours ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 7 months 4 hours ago
View all comments

வாசகர் கருத்து