முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஒடிசாவில் டானா புயலால் எந்த உயிரிழப்பும் ஏற்படவில்லை: முதல்வர் மோகன் சரண் மாஜி தகவல்

வெள்ளிக்கிழமை, 25 அக்டோபர் 2024      இந்தியா
Mohan-Charan 2024-10-25

புவனேஷ்வர், வங்கக்கடலில் கடந்த 21-ம் தேதி உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி, கடந்த 23-ம் தேதிபுயலாக வலுப்பெற்றது. இந்த புயலுக்கு டானா என்று பெயரிடப்பட்டு உள்ளது. டானா புயல், மேற்கு - வடமேற்கு திசையில் நகர்ந்து நேற்று முன்தினம் காலை தீவிர புயலாகவும் உருவெடுத்தது.

இந்த புயல் தீவிர புயலாக வடக்கு ஒடிசா - மேற்கு வங்க கடற்கரை பகுதிகளில், பூரி - சாகர் தீவுகளுக்கு இடையே நேற்று அதிகாலை கரையைக் கடந்தது. புயல் கரையைக் கடக்கும் போது, ஒடிசா மற்றும் மேற்கு வங்காளத்தில் மிக கனமழை பெய்து வருகிறது.

இந்நிலையில், ஒடிசாவில் புயலால் ஏற்பட்ட சேதங்களை நேற்று காலை அம்மாநில முதல்வர் மோகன் சரண் மாஜி  ஆய்வு செய்தார். அதன் பின்னர் அவர் கூறியதாவது, 

ஒரு உயிரிழப்புக் கூட நேரிடக் கூடாது என்ற வகையில் எடுக்கப்பட்ட முன்னெச்சரிக்கை திட்டம் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டுள்ளது. மேலும் ஜெகநாதரின் அருளாலும், அனைவரின் ஒத்துழைப்பாலும், அரசு மனித உயிர்களை காப்பாற்றுவதில் வெற்றி பெற்றுள்ளது.

மேலும், சாலைகளில் உள்ள மரங்கள் மற்றும் மின் கம்பங்கள் அறுந்து விழுந்திருப்பதும் கூட  அகற்றப்படும் என்றும், ஏற்கனவே சீரமைப்புப் பணிகளும் முழு வீச்சில் நடந்து வருகிறது.  மோசமாக பாதிக்கப்பட்டுள்ள கேந்திரபாரா, பாலசோர் மற்றும் பத்ரக் மாவட்டம் உட்பட அனைத்து  இடங்களுக்கும் விரைவில் மின்சாரம் வழங்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.  

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 4 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 4 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 4 months 4 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 4 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 6 months 4 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 6 months 4 weeks ago
View all comments

வாசகர் கருத்து