முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தேசியவாத காங்கிரசில் இணைந்த பாபா சித்திக்கின் மகன் வேட்பாளராக அறிவிப்பு

வெள்ளிக்கிழமை, 25 அக்டோபர் 2024      இந்தியா      அரசியல்
Jeeshan 2024-10-25

மும்பை, பாபா சித்திக் மகன், அஜித் பவாரின் தேசியவாத காங்கிரசில் இணைந்தார். இந்த நிலையில் பாந்த்ரா கிழக்கு தொகுதி வேட்பாளராக அவர் அறிவிக்கப்பட்டுள்ளார்.  

மகராஷ்டிரா முன்னாள் அமைச்சர் பாபா சித்திக் கடந்த 12-ம் தேதி 3 பேர் கொண்ட கும்பலால் சுட்டுக் கொல்லப்பட்டார்.  இந்த சம்பவம் குறித்து விசாரணை நடைபெற்று வரும் நிலையில், பாபா சித்திக் மகன் ஜீஷன், அஜித் பவாரின் தேசியவாத காங்கிரசில் தம்மை இணைத்துக் கொண்டு உள்ளார்.

இது குறித்து அவர் கூறி இருப்பதாவது,

எனக்கும், எனது குடும்பத்தினருக்கும் உணர்ச்சிமயமான நாள். என்னை நம்பியதற்காக அஜித் பவார், பிரபுல் படேல், சுனில் தட்கரே ஆகியோருக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். பாந்த்ரா கிழக்கில் போட்டியிட சீட் கிடைத்துள்ளது. நான் இதில் நிச்சயம் வெற்றி பெறுவேன். 

மகா விகாஸ் அகாதி கூட்டணியில் இந்த தொகுதி காங்கிரசின் கூட்டணி கட்சியான சிவசேனா போட்டியிடுகிறது. சிவசேனாவின் அழுத்தம் காங்கிரஸ் கட்சிக்கு உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

2019-ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் சிவசேனாவின் விஷ்வநாத் மஹாஸ்வரை ஜீஷன் தோற்கடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 4 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 4 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 4 months 4 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 4 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 6 months 4 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 6 months 4 weeks ago
View all comments

வாசகர் கருத்து