முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பொருளாதார நெருக்கடி: செலவுகளை கட்டுப்படுத்த மாலத்தீவு அரசு முடிவு

வெள்ளிக்கிழமை, 25 அக்டோபர் 2024      உலகம்
Maldives 2024-05-07

மாலே, பொருளாதார நெருக்கடி காரணமாக, செலவுகளைக் கட்டுப்படுத்த மாலத்தீவு அரசு முடிவு செய்துள்ளது. மேலும் தனது சம்பளத்தை 50 சதவீதமாக குறைக்க அதிபர் முகமது முய்சு முடிவு செய்துள்ளார்.

அண்டை நாடான மாலத்தீவில் இந்திய எதிர்ப்பு பிரசாரம் செய்து ஆட்சியை கைப்பற்றியவர் முகமது முய்சு. இந்தியாவுக்கு எதிரான அமைச்சர்களின் வெறுப்பு பிரசாரம் காரணமாக அங்கு செல்லும் இந்திய சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை சரிந்தது. 

அன்றாட வருவாய்க்கு இந்திய சுற்றுலாப் பயணிகளை மட்டுமே நம்பி இருந்த மாலத்தீவுகள், இதனால் பெரும் நெருக்கடியை எதிர்கொண்டுள்ளது. இன்னும் ஒரு மாத அத்தியாவசிய செலவுக்கு மட்டுமே கையிருப்பில் அந்நிய செலாவணி அந்நாட்டு அரசின் கருவூலத்தில் உள்ளது. 

வேறு வழியில்லாத சூழலில், இந்தியாவிடம் இறங்கி வந்து கெஞ்சிக் கூத்தாடும் நிலைக்கு மாலத்தீவு அரசு தள்ளப்பட்டுள்ளது. இந்த மாதம் துவக்கத்தில், டெல்லியில் பிரதமர் மோடியை மாலத்தீவு அதிபர் முகமது முய்சு சந்தித்து பேசி உதவி கேட்டார். மோடியும் உதவி செய்வதாக உறுதியளித்துள்ளார். 

இந்நிலையில், 2025-ம் ஆண்டு பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் போது, பொருளாதார நெருக்கடியை சமாளிக்க, அரசின் செலவினங்களை குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அரசு தரப்பு அறிவித்துள்ளது. மேலும் தனது சம்பளத்தை 50 சதவீதமாக குறைக்க மாலத்தீவு அதிபரும் முடிவு செய்துள்ளார்.  

அனைத்து அரசு அதிகாரிகளின் சம்பளமும் 10 சதவீதம் குறைக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிக்காத பட்சத்தில் மாலத்தீவில் வரும் நாட்களில் நிலைமை இன்னும் மோசமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 4 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 4 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 4 months 4 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 4 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 6 months 4 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 6 months 4 weeks ago
View all comments

வாசகர் கருத்து