முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தென் ஆப்பிரிக்க அணி அறிவிப்பு

வெள்ளிக்கிழமை, 25 அக்டோபர் 2024      விளையாட்டு
South-Africa 2024-05-15

Source: provided

தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி வங்காளதேசத்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடி வருகிறது. இதில் முதல் ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்கா அபார வெற்றி பெற்றது. இதன் மூலம் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 1-0 என தென் ஆப்பிரிக்கா முன்னிலையில் உள்ளது.இதனையடுத்து இவ்விரு அணிகளுக்கும் இடையிலான 2வது டெஸ்ட் போட்டி வரும் 29ம் தேதி சட்டோகிராமில் தொடங்குகிறது. 

இந்நிலையில் இந்த போட்டிக்கான தென் ஆப்பிரிக்க அணி அறிவிக்கப்பட்டுள்ளது. தென் ஆப்பிரிக்க அணி விவரம் பின்வருமாறு.,  மார்க்ரம் (கேப்டன்), டேவிட் பெடிங்காம், மேத்யூ பிரிட்ஸ்கே, பிரெவிஸ், டோனி டி சார்சி, கேஷவ் மகராஜ், வியான் முல்டர், செனுரன் முத்துசாமி, லுங்கி நிகிடி, டேன் பட்டர்சன், டேன் பீட், ரபடா, ஸ்டப்ஸ், ரையன் ரிக்கெல்டன் மற்றும் கைல் வெர்ரேயின்

______________________________________________________________________________________________

அஸ்வின் புதியல் மைல்கல்

2-வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் சிறப்பான பந்துவீச்சில் நியூசிலாந்து முதல் இன்னிங்சில் 259 ரன்களில் ஆல் அவுட் ஆனது. அதிகபட்சமாக கான்வே 76 ரன்களும்,ரச்சின் ரவீந்திரா 65 ரன்களும் அடித்தனர். இந்தியா தரப்பில் சுந்தர் 7 விக்கெட்டுகளும், அஸ்வின் 3 விக்கெட்டுகளும் கைப்பற்றி அசத்தினர்.  இதனையடுத்து முதல் இன்னிங்சை தொடங்கிய இந்தியா முதல் நாளில் 16-1 ரன்களுடன் விளையாடி வருகிறது. ஜெயஸ்வால் 6 ரன்களுடனும், கில் 10 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். நேற்று 2-ம் நாள் ஆட்டம் நடைபெற்றது. 

முன்னதாக அஸ்வின் இந்த போட்டியில் கைப்பற்றிய 3 விக்கெட்டுகளையும் சேர்த்து சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் அவரது விக்கெட் எண்ணிக்கை 531ஆக உயர்ந்தது. இதன் மூலம் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக விக்கெட் வீழ்த்தியவர்கள் பட்டியலில் ஆஸ்திரேலியாவின் நாதன் லயனை (530 விக்கெட்) பின்னுக்கு தள்ளி அஸ்வின் 7வது இடத்திற்கு முன்னேறி உள்ளார். இந்த பட்டியலில் முதல் இடத்தில் இலங்கையின் முத்தையா முரளிதரன் (800 விக்கெட்) உள்ளார்.

______________________________________________________________________________________________

கோலி குறித்து அனில் கும்ப்ளே 

நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்தின் பகுதி நேர பவுலரான கிளென் பிலிப்சுக்கு எதிராக அவுட்டான விராட் கோலி இப்போட்டியிலும் சான்ட்னருக்கு எதிராக மோசமான ஷாட் அடித்து பெவிலியன் திரும்பினார். இதகுறித்து முன்னாள் வீரர் அனில் கும்ப்ளே விமர்சித்துள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு:-"ஓரிரு உள்ளூர் போட்டிகளில் விளையாடியிருந்தால் அது இங்கு உதவியிருக்கும். ஏனெனில் முதன்மையான போட்டியில் விளையாடுவது பயிற்சி எடுப்பதை விட அதிகமாக உதவும். அது உங்கள் கையை ஓங்க வைக்கும். 

அதே சமயம் சுழலுக்கு எதிராக விராட் கோலி தடுமாறுவதற்கு அது மட்டுமே காரணம் என்று நான் நினைக்கவில்லை. களத்திற்கு அவர் பேட்டிங் செய்ய வரும்போது பிட்ச் சுழலுக்கு சாதகமாக இருக்கிறது. இன்னிங்சின் தொடக்கத்தில் சுழல் பந்து வீச்சுக்கு எதிராக அவர் சவால் கொடுக்கும் முனைப்புடன் விளையாடினார். ஆனால் சூழ்நிலைகள் எதிரணி ஸ்பின்னர்களுக்கு சாதகமாக இருந்தன. ஒரு தந்திர நகர்வால் கொண்டு வரப்பட்ட கிளென் பிலிப்ஸ் சுழலில் சுப்மன் கில், விராட் கோலி ஆகியோரின் வெளியேற்றத்துக்கு முக்கிய பங்காற்றியது" என்று கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 3 hours ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 4 hours ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 5 months 5 hours ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 5 hours ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 7 months 4 hours ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 7 months 4 hours ago
View all comments

வாசகர் கருத்து