முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ரோகித்திற்கு ஷிகர் தவான் ஆதரவு

செவ்வாய்க்கிழமை, 29 அக்டோபர் 2024      விளையாட்டு
Shikhar-Dhawan 2024-04-10

Source: provided

நியூசிலாந்து அணிக்கு எதிராக இந்தியா தங்களுடைய சொந்த மண்ணில் 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இந்த தொடரில் இதுவரை நடைபெற்ற 2 போட்டிகளிலும் இந்தியா அடுத்தடுத்த தோல்விகளை சந்தித்துள்ளது. அதனால் 12 வருடங்கள் கழித்து சொந்த மண்ணில் நடைபெற்ற டெஸ்ட் தொடரை இந்தியா இழந்துள்ளது. மேலும் டெஸ்ட் கிரிக்கெட்டில் முதல் முறையாக சொந்த மண்ணில் நியூசிலாந்துக்கு எதிராக ஒரு தொடரில் இந்தியா தோல்வியை சந்தித்துள்ளது. இந்த தோல்விக்கு பேட்டிங்கில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தாத ரோகித் சர்மா கேப்டனாகவும் சுமாராக செயல்பட்டது முக்கிய காரணம் என்று பலரும் அவரை விமர்சித்து வருகிறார்கள்.

இந்நிலையில் ஒரு மோசமான தோல்வியால் ரோகித் சர்மாவை விமர்சிப்பவர்கள் அவர் இந்திய அணியில் ஏற்படுத்தியுள்ள நல்ல மாற்றங்களையும் பார்க்க வேண்டும் என்று ஷிகர் தவான் ஆதரவு தெரிவித்துள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு:- "நீங்கள் பேசும் விஷயங்களை நாங்கள் உணர்வதில்லை. கிரிக்கெட்டில் எப்போதும் ஒரு வித அழுத்தம் இருக்கும். ஆனால் நாங்கள் அதில் சந்திக்கும் வெற்றி தோல்விகளுக்காக அழுத்தத்தில் வசிப்பதில்லை. ஏனெனில் விளையாட்டில் வெற்றி தோல்வி என்பது ஒரு அங்கம். கிரிக்கெட்டர்களாக நாங்கள் அதிகமாக சிந்திப்பதில்லை. ரோகித் சர்மா சிறந்த கேப்டன். இது வெற்றி தோல்வியை சந்திப்பதை மட்டும் பொருத்ததல்ல. அணிக்குள் ஒரு ஆழமான தொடர்பு இருக்கும். அதனால் அணியில் இருக்கும் வீரர்கள் தங்களுடைய கேப்டனுடன் எந்தளவுக்கு தொடர்பு வைத்துள்ளார்கள், அவர்கள் கேப்டனை எப்படி பார்க்கிறார்கள் என்பது முக்கியம்" என்று கூறினார்.

____________________________________________________________________________

பாக்., புதிய கேப்டன் நம்பிக்கை

பாகிஸ்தான் அணி நவம்பர் 4-ந் தேதி முதல் ஆஸ்திரேலியாவிலும், 24-ந் தேதியில் இருந்து ஜிம்பாப்வேயிலும் சுற்றுப்பயணம் செய்து தலா 3 ஒருநாள் மற்றும் மூன்று 20 ஓவர் போட்டிகள் கொண்ட தொடர்களில் விளையாடுகிறது. இந்த தொடர்களுக்கான பாகிஸ்தான் அணி நேற்று முன்தினம் அறிவிக்கப்பட்டது. பாபர் அசாம் விலகியதை அடுத்து புதிய கேப்டனாக விக்கெட் கீப்பர் முகமது ரிஸ்வான் நியமிக்கப்பட்டார். இந்நிலையில் ஆஸ்திரேலியாவை அதன் சொந்த மண்ணில் வீழ்த்துவோம் என்று முகமது ரிஸ்வான் சூளுரைத்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், "ஆஸ்திரேலிய மண்ணில் நாங்கள் கடும் சிரமங்களை சந்தித்தோம் என்பதில் எந்த சந்தேகமும் கிடையாது. கடந்த சுற்றுப்பயணங்களில் நாங்கள் அங்கே சரியாக விளையாடவில்லை. அதேசமயம் நாங்களும் ஆஸ்திரேலியாவுக்கு பல சிக்கல்களை கொடுத்திருக்கின்றோம். இம்முறை நாங்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டு எங்கள் நாட்டு ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்வோம்.  நாங்கள் கடைசியாக ஆஸ்திரேலியாவுக்கு டெஸ்ட் தொடரில் விளையாட சென்றோம். அப்போது அனைத்து போட்டிகளிலும் நாங்கள் வெற்றியின் அருகே வந்து தோல்வியை தழுவினோம். எங்கள் அணியில் சில குறைகள் இருக்கின்றன. அதனை நாங்கள் சரி செய்து இருக்கின்றோம். இதனால் நிச்சயம் நாங்கள் ஆஸ்திரேலிய மண்ணில் ஆஸ்திரேலியாவை வீழ்த்துவோம்" என்று கூறினார்.

____________________________________________________________________________

தென்னாப்பிரிக்கா 307 ரன்கள் குவிப்பு

தென்னாப்பிரிக்க அணி வங்தேசத்துக்கு எதிரான முதல் டெஸ்ட்டில் அபார வெற்றி பெற்றது. இதைத் தொடர்ந்து 2ஆவது டெஸ்ட்டில் முதல் பேட்டிங் செய்த தெ.ஆ. முதல்நாள் முடிவில் 2விக்கெட் இழப்புக்கு 307 ரன்கள் குவித்துள்ளது. ஸ்டப்ஸ், டோனி டி ஜோர்ஜி தங்களது முதல் டெஸ்ட் சதமடித்து அசத்தினார்கள். மார்க்ரம் 33 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். டேவிட் பெடிங்டன் 18 ரன்களுடனும் டோனி டி ஜோர்ஜி 141 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் களத்தில் இருக்கிறார்கள். வங்கதேசம் சார்பில் தைஜுல் இஸ்லாம் 2 விக்கெட்டுகள் எடுத்தார்.

____________________________________________________________________________

3-வது டெஸ்ட்டில் வில்லியம்சன் விலகல்

இந்தியாவுக்கு எதிரான 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து வீரர் கேன் வில்லியம்சன் காயம் காரணமாக விலகுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நியூசிலாந்து அணியின் மூத்த கிரிக்கெட் வீரர் கேன் வில்லியம்சனின் தொடையில் தசை கிழிந்த காயம் குணமாகததால் மும்பையில் நடைபெறும் இந்தியாவுக்கு எதிரான போட்டியில் பங்கேற்கமாட்டார் என்று நியூசிலாந்து கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது. இந்தியாவுக்கு எதிராக நடந்து வரும் மூன்று போட்டிகள் கொண்ட தொடரில் நியூசிலாந்து அணி 2-0 என்ற கணக்கில் தொடரை வென்றுள்ளது. இந்தியா 12 ஆண்டுகளுக்குப் பிறகு சொந்த மண்ணில் தோல்வியை சந்தித்தது பெரிய பேசுபொருளாக மாறியுள்ளது. 

தலைமைப் பயிற்சியாளர் கௌதம் கம்பீர், அணியின் கேப்டன் ரோஹித் சர்மா மீது இந்திய ரசிகர்கள் விமர்சனங்களை முன்வைத்துள்ளனர். கேன் வில்லியம்சன் இல்லாமலே முக்கியமான தொடரை நியூசிலாந்து வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது. நியூசிலாந்து அணியின் தலைமைப் பயிற்சியாளர் கேரி ஸ்டெட் கூறியதாவது: கேன் வில்லியம்சன் தேறிவருகிறார். ஆனால், அடுத்த போட்டியில் கலந்துகொள்ளும் அளவுக்கு இல்லை. இப்போதைக்கு கேன் வில்லியம்சன் நியூசிலாந்திலேயே தங்கியிருப்பதுதான் அவரது உடல்நலத்துக்கு நல்லது. அடுத்த மாதம் இங்கிலாந்துடனான டெஸ்ட் தொடரில் பங்கேற்க தயாராகி வருகிறார்.

____________________________________________________________________________

பயிற்சியாளராக மேத்யூ வேட் நியமனம்

36 வயதாகும் மேத்யூ வேட் 36 டெஸ்ட், 97 ஒருநாள், 92 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார். 13 வருடமாக ஆஸி. அணிக்காக விளையாடியுள்ளார். கடைசியாக டி20 உலகக் கோப்பையில் விளையாடினார். அடுத்து பாகிஸ்தானுடன் நடைபெறவிருக்கும் டி20 தொடருக்கும் ஒருநாள் தொடருக்கும் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார். சர்வதேச கிரிக்கெட்டில் ஓய்வு பெற்றாலும் உள்ளூர் கிளப் போட்டிகளில் விளையாடுவார். பிக் பேஸ், டாஸ்மானிய அணிகளில் விளையாடுவார்.

ஓய்வு குறித்து மேத்யூ வேட் கூறியதாவது.,  கடந்த டி20 உலகக் கோப்பையுடன் எனது சர்வதேச கிரிக்கெட் முடிந்துவிடுமென எனக்குத் தெரியும். ஓய்வு, பயிற்சியாளர் தொடர்பாக ஜியார்ஜ் பெய்லி, மெக்டொனால்டு உடன் கடந்த 6 மாதங்களாக உரையாடி வந்திருக்கிறேன். கடந்த சில வருடங்களாகவே பயிற்சியாளர் ஆக வேண்டும் என்ற எண்ணம் இருந்து வந்தது. நல்வாய்ப்பாக்கா அதுவும் அமைந்துவிட்டது. அதற்காக ஆர்வமாக இருக்கிறேன். ஆஸ்திரேலியாவின் அணியினர், பயிற்சியாளர்கள், ரசிகர்கள் அனைவருக்கும் நன்றி. என்னைச் சுற்றி நல்ல மனிதர்கள் இல்லாவிட்டால் இவ்வளவு சிறப்பாக விளையாடி இருக்க முடியாது என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 4 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 4 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 5 months 4 days ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 4 days ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 7 months 4 days ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 7 months 4 days ago
View all comments

வாசகர் கருத்து