முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திருப்பதிக்கு தனி மாநில அந்தஸ்து: சுப்ரீம் கோர்ட்டில் மனு தள்ளுபடி

வெள்ளிக்கிழமை, 8 நவம்பர் 2024      இந்தியா
Supreme-Court 2023-04-06

புது டெல்லி, 30 லட்சம் மக்கள் மட்டுமே வாழும் திருப்பதிக்கு எப்படி தனிமாநில அந்தஸ்து வழங்க முடியும்? என கேள்வி எழுப்பிய சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர். 

ஆந்திராவின் திருப்பதியில் உள்ள வெங்கடேஸ்வர சுவாமி கோவிலில் வழங்கும் லட்டு தயாரிப்பில், விலங்கு கொழுப்பு கலந்த நெய் பயன்படுத்தப்பட்டதாக, ஆந்திர முதல்வரும், தெலுங்கு தேசம் கட்சித் தலைவருமான சந்திரபாபு நாயுடு சமீபத்தில் குற்றம் சாட்டினார். ஆய்விலும் லட்டில் விலங்கு கொழுப்பு கலக்கப்பட்டது உறுதி செய்யப்பட்டது. 

திருமலை திருப்பதி தேவஸ்தானம் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி சுப்ரீம் கோர்ட்டில் பல்வேறு பொதுநல மனுக்கள் தொடரப்பட்டன. அந்த வகையில், தேவஸ்தானம் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, பால் என்பவர் சுப்ரீம் கோர்ட்டில் மனுத்தாக்கல் செய்தார். 

அந்த மனுவில், திருப்பதி லட்டு விவகாரத்தில் ஆந்திரா அரசு, திருப்பதி தேவஸ்தானம் மற்றும் சி.பி.ஐ., மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். திருப்பதிக்கு தனிமாநில அந்தஸ்து வழங்க வேண்டும் என கூறியிருந்தார்.

இந்த மனு நேற்று நீதிபதி கவாய் தலைமையான அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் கூறியதாவது, 

கோவிலுக்கு நாங்கள் எப்படி தனிமாநில அந்தஸ்து கொடுக்க உத்தரவிட முடியும்? ஒரு குறிப்பிட்ட மதத்திற்கு தனி மாநிலம் உருவாக்க வேண்டும் என நாங்கள் கூற முடியாது.  30 லட்சம் மக்கள் மட்டுமே வாழும் திருப்பதிக்கு எப்படி தனிமாநில அந்தஸ்து வழங்க முடியும்? 

இது போன்ற மனுக்களை எப்படி விசாரிக்க முடியும்? இவ்வாறு  சரமாரி கேள்வி எழுப்பிய நீதிபதிகள், மனுவை தள்ளுபடி செய்து  உத்தரவிட்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 7 months 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 9 months 1 week ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 9 months 1 week ago
View all comments

வாசகர் கருத்து