முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சத்தீஷ்கரில் நடந்த என்கவுன்டரில் 5 நக்சலைட்டுகள் சுட்டுக்கொலை

சனிக்கிழமை, 16 நவம்பர் 2024      இந்தியா
Naxalites 2024-11-16

Source: provided

ராய்ப்பூர் : சத்தீஷ்கரில் பாதுகாப்பு படையினர் நடத்திய என்கவுன்டரில் 5 நக்சலைட்டுகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். 

சத்தீஷ்கார், மராட்டியம், ஜார்க்கண்ட் போன்ற மாநிலங்கள் நக்சலைட்டுகள், மாவோயிஸ்ட்டுகளின் ஆதிக்கம் அதிகமாக உள்ளது. இந்த நக்சலைட்டுகள், மாவோயிஸ்டுகளை ஒடுக்கும் நடவடிக்கையில் மாநில சிறப்பு தனிப்படை போலீசாருடன் இணைந்து மத்திய ரிசர்வ் போலீசாரும் ஈடுபட்டு வருகின்றனர். 

இந்நிலையில், சத்தீஷ்கார் மாநிலம் நாராயண்பூர் , கன்கீர் மாவட்டங்களுக்கு இடையே உள்ள வனப்பகுதியில் நக்சலைட்டுகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்புப்படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

தகவலின் அடிப்படையில் நேற்று காலை 8 மணியளவில் எல்லைப் பாதுகாப்பு படையினர், மாவட்ட ரிசர்வ் காவலர்கள், சிறப்பு படைப் பிரிவினர் இணைந்து வனப்பகுதியில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது, அங்கு பதுங்கி இருந்த நக்சலைட்டுகள் துப்பாக்கி சூடு தாக்குதல் நடத்தினர். 

இந்த தாக்குதலுக்கு பாதுகாப்புப் படையினரும் பதிலடி கொடுத்தனர். பாதுகாப்புப் படையினர் நடத்திய தாக்குதலில்  நக்சலைட்டுகள் 5 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர். இந்த என்கவுன்டரின்போது பாதுகாப்புப்படையினர் 2 பேர் காயமடைந்தனர்.    

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 5 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 7 months 3 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 7 months 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து