முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்தியாவை வளர்ந்த நாடாக மாற்றுவதே மத்திய அரசின் இலக்கு : பிரதமர் மோடி திட்டவட்டம்

சனிக்கிழமை, 16 நவம்பர் 2024      இந்தியா
Modi 2023 07 30

Source: provided

புதுடெல்லி : இந்தியாவை வளர்ந்த நாடாக மாற்றுவதையே தனது அரசு நோக்கமாக கொண்டுள்ளது என பிரதமர் மோடி தெரிவித்தார்.

டெல்லியில்  நடந்த தனியார் மாநாட்டில் கலந்து கொண்ட பிரதமர் மோடி பேசியதாவது: 

உலக நாடுகளின் ஒவ்வொரு தேர்தலின் போது ஆட்சிகள் மாறுகின்றன. இந்திய மக்கள் 3-வது முறையாக பா.ஜ.க. அரசை தேர்ந்தெடுத்துள்ளனர். இதற்கு முன்பு தேர்தல் வெற்றிக்காகவே அரசுகள் நடந்தன. 

பா.ஜ.க. ஆட்சியில் மக்கள் நம்பிக்கையை மீட்டெடுத்துள்ளோம். மக்களின் வளர்ச்சியே பா.ஜ.க.  அரசின் தாரக மந்திரம். இந்தியாவை வளர்ந்த நாடாக மாற்றுவதையே தனது அரசு நோக்கமாக கொண்டுள்ளது. இந்திய மக்கள் தங்கள் நம்பிக்கையை எங்களிடம் ஒப்படைத்துள்ளனர்.

கடந்த 10 ஆண்டுகளில் நாட்டின் இளைஞர்கள் வளர்ச்சி அடைந்து வருகின்றனர். 1.25 லட்சத்திற்கு அதிகமான ஸ்டார்ப் அப் நிறுவனங்கள் துவங்கப்பட்டுள்ளன. இளைஞர்கள் தேசத்தை பெருமைப்படுத்த ஆர்வமாக உள்ளனர்.

முந்தைய காலத்தில் பயங்கரவாதம் இந்திய மக்களை பாதுகாப்பற்றதாக உணர வைத்தது. இப்போது காலம் மாறி விட்டது. பயங்கரவாதிகள் தங்கள் வீடுகளில் பாதுகாப்பற்றதாக உணர்கிறார்கள். தனது அரசு ஓட்டு வங்கி அரசியலில் இருந்து விலகி, நாட்டின் வளர்ச்சிக்காக உழைத்து வருகிறது. இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 5 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 7 months 3 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 7 months 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து