முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மணிப்பூரில் தொடரும் பதற்றம்: முதல்வர், எம்.எல்.ஏ.க்களின் வீடுகள் மீது போராட்டக்காரர்கள் தாக்குதல் : ஆயுதப்படை சிறப்பு சட்டத்தை திரும்பப்பெற கோரிக்கை

ஞாயிற்றுக்கிழமை, 17 நவம்பர் 2024      இந்தியா
Manipur 2024-11-17

Source: provided

இம்பால் : மணிப்பூரில் தீவிரவாதிகளால் கடத்தப்பட்ட 6 பேரின் உடல்களை கண்டெடுக்கப்பட்ட சில மணி நேரத்தில் ஏற்பட்ட கலவரத்தைத் தொடர்ந்து போராட்டக்காரர்கள் முதல்வர், எம்எல்ஏக்களின் வீடுகள் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர்.ஆயுதப்படை சிறப்பு அதிகாரச்சட்டத்தை திரும்பப்பெறக்கோரி போராட்டம் தொடர்கிறது.

போராட்டக்காரர்கள், மாநில முதல்வர் பைரன் சிங்கின் மருமகன் உட்பட ஆறு எம்எல்ஏக்களின் மூன்று பேரின் வீடுகளில் சூறையாடினர், சொத்துக்களை தீ வைத்து சேதப்படுத்தினர். இம்பால் நகரின் பல பகுதிகளில் போராட்டக்காரர்களை கண்ணீர் புகை குண்டு வீசி கலைத்ததாக போலீஸார் தெரிவித்தனர். போரட்டத்தைத் தடுக்கும் விதமாக ஐந்து மாவட்டங்களில் அரசு காலவரையற்ற ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது. சில இடங்களில் இணையத் தொடர்பு துண்டிக்கப்பட்டுள்ளது.

மாநிலத்தின் தலைமைச் செயலர் வினீத் ஜோஷி, பாதிக்கப்பட்டுள்ள இம்பால் மேற்கு மற்றும் கிழக்கு, பிஷ்னுபூர், தவுபாங்க், கக்சிங், காங்போக்பி மற்றும் சுரசந்த்பூர் ஆகிய மாவட்டங்களுக்கு இரண்டு நாட்களுக்கு இணையம் மற்றும் மொபைல் டேட்டா சேவைகளை நிறுத்தி வைக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.

மணிப்​பூரில் ஆயுதம் தாங்கிய குகி தீவிரவாதிகளால் கடத்தப்பட்டதாக கூறப்படும் ஆறு பேரில் ஒரு பெண் மற்றும் 2 குழந்தை​களின் உடல்கள் வெள்ளிக்கிழமை இரவு, ஜிரிபாம் மாவட்டத்தில் உள்ள போரோபெக்ராவில் இருந்து 16 கி.மீ. தொலை​வில் கண்டெடுக்கப்பட்டன. மேலும் 3 பேரின் உடல்கள் சனிக்கிழமை பிற்​பகல் கண்டெடுக்கப்பட்டன. அழுகிய நிலையில் காணப்பட்ட உடல்கள், பிரேதப் பரிசோதனைக்காக எஸ்எம்சிஎச் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்​டது.

இதனைத் தொடர்ந்து மணிப்பூரில் மீண்டும் போராட்ட பதற்றம் வெடித்தது. இந்நிலையில் அமைச்சர்கள் சபம் ரஞ்சன், எல். சுசிந்த்ரோ சிங் மற்றும் ஒய்.ஹேம்சந்த் ஆகியோரின் வீடுகளை போராட்டக்காரர்கள் முற்றுகையிட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இதனால் இம்பால் மேற்கு மற்றும் கிழக்கு, பிஷ்னுபூர், தவுபால் மற்றும் கக்சிங் ஆகிய ஐந்து மாவட்டங்களில் காலவரையற்ற ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மாநிலத்தில் ஆறு காவல்நிலையத்தில் மீண்டும் அமல்படுத்தப்பட்ட ஆயுதப்படை சிறப்பு அதிகாரச்சட்டத்தினை மறுபரிசீலனை செய்து திரும்பப்பெறுமாறு மத்திய அரசுக்கு, மாநில அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது. இதனிடையே, மணிப்பூர் பள்ளத்தாக்கில் மீண்டும் போராட்டமும் பதற்றமும் அதிகரித்துள்ள நிலையில், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மகாராஷ்டிராவில் திட்டமிடப்பட்டிருந்த தனது தேர்தல் பேரணிகளை ரத்து செய்துள்ளார். வடகிழக்கு மாநிலத்தில் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில் அமித் ஷா டெல்லி திரும்பியுள்ளார்.

முன்னதாக, மணிப்​பூரில் கடந்த 2023-ம் ஆண்டு மே மாதத்​தில் மைதேயி - குகி குழு​வினர் இடையே மோதல் வெடித்தது. இது வன்முறையாக மாறி, இரு தரப்பிலும் நூற்றுக்​கணக்கானோர் உயிரிழந்​தனர். வன்முறை காரணமாக சுமார் 60 ஆயிரம் பேர் வேறு இடங்​களுக்கு புலம்​பெயர்ந்​தனர். அவர்​களுக்கு தேவையான உதவிகளை மாநில அரசு வழங்கி வருவது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 5 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 7 months 3 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 7 months 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து