முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தொகுப்பூதிய முறையில் பேராசிரியர்கள் நியமனம்: அறிவிப்பை திரும்ப பெற்றது அண்ணா பல்கலைக்கழகம்

வெள்ளிக்கிழமை, 22 நவம்பர் 2024      தமிழகம்
Anna-University 1

Source: provided

சென்னை : தொகுப்பூதிய முறையில் பேராசிரியர்கள் நியமனம் என்ற அறிவிப்பை அண்ணா பல்கலைக்கழகம் திரும்பப் பெற்றது. இனிமேல் அவுட்சோர்சிங் முறையில் மட்டுமே புதிய பணி நியமனங்கள் மேற்கொள்ளப்படும் எனவும் அண்ணா பல்கலைக் கழகம்  அறிவித்துள்ளது. 

இது தொடர்பாக அண்ணா பல்கலைக் கழக பதிவாளர் பல்கலைக் கழகத்துக்கு உட்பட்ட டீன்கள், பல்வேறு மையங்களின் இயக்குநர்களுக்கு அனுப்பியுள்ள ஒரு சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது: 

பல்கலைக்கழக நிதிக்குழு மற்றும் சிண்டிகேட் குழு எடுத்த முடிவின்படி, புதிதாக மேற்கொள்ளப்படும் உதவி பேராசிரியர், ஆசிரியர் அல்லாத அலுவலர்கள், ஊழியர்கள் நியமனம் தினக்கூலி அல்லது தொகுப்பூதியம் அடிப்படையில் அவுட்சோர்சிங் முறையில் மட்டுமே மேற்கொள்ளப்படும்.

ஏதேனும் திட்டங்களுக்கு பணியாளர்கள் தேவைப்பட்டால் தினக்கூலி அல்லது தொகுப்பூதியத்தில் தற்காலிக பணியாளர்களை திட்ட காலம் முடியும் வரை பணியில் அமர்த்தலாம். 

ஏதேனும் ஒரு துறையில் கூடுதலாக தற்காலிக பணியாளர்கள் பணியாற்றினால் அவர்களை பணியாளர் பற்றாக்குறை உள்ள வேறு துறையில் பணியமர்த்தலாம். இந்த புதிய உத்தரவு 20.1. 2024 முதல் நடைமுறைக்கு வருகிறது. இவ்வாறு அந்த சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது. 

பதிவாளரின் இந்த சுற்றறிக்கை காரணமாக, அண்ணா பல்கலைக் கழகத்தில் இனிமேல் நிரந்தர உதவி பேராசிரியர்களோ, அலுவலர்களோ, ஊழியர்களோ நியமிக்கப்பட மாட்டார்கள் என்ற சூழல் ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள அனைத்து பல்கலைக் கழகங்களிலும் ஆசிரியர் மற்றும் ஆசிரியர் அல்லாத பதவிகளில் ஏராளமான காலியிடங்கள் உள்ளன. அவற்றில் தினக்கூலி மற்றும் தொகுப்பூதிய அடிப்படையில் ஆயிரக்கணக்கானோர் நீண்ட காலமாக பணியாற்றி வருகிறார்கள்.

அண்மையில் தேசிய கல்விக்கொள்கை-2020 தொடர்பான கருத்தரங்கில் பங்கேற்க சென்னை வந்திருந்த பல்கலைக் கழக மானியக்குழு (யு.ஜி.சி) தலைவர் எம்.ஜெகதீஷ் குமார், பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் தொகுப்பூதிய முறையில் ஆசிரியர்களை நியமிக்கக் கூடாது என அறிவுறுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 1 day ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 1 day ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 6 months 1 day ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 1 day ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 8 months 1 day ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 8 months 1 day ago
View all comments

வாசகர் கருத்து